பொய்யான வாக்குறுதி கொடுப்பவர்களிடம் ஏமாற வேண்டாம் காது கொடுத்து கேட்க வேண்டாம்,கை நீட்ட வேண்டாம்!- ராதிகா சரத்குமார்..
விருதுநகர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஒ. ஆலங்குளம் பகுதியில் 2வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
மக்களுக்காக உங்களுக்காக அவ்வளவு பேசுறாருங்க எவ்வளவு பெருமையா இருக்கு அந்த மாதிரி இவரும் எவ்வளவு சிறப்பா செயல்படுகிறார் நீங்கள் ஒன்னே ஒன்னு புரிந்துக் கொள்ளுங்கள்.
பணத்தை கொடுத்து விலைக்கு வாங்க பார்கிறார்கள். மக்கள் ஏமாறப்போவதில்லை அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
நான் உங்களிடம் ஒரு சகோதரியாக கேட்டுக்கொள்கிறேன் தயவு செஞ்சு அவங்க சொல்லுகின்ற பொய் வாக்குகளுக்கு நீங்கள் யாரும் காது கொடுக்க வேண்டாம் கை நீட்ட வேண்டாம் தலை நிமிர்ந்து வாழுங்க நாங்க எல்லாரும் சுயமா சம்பாரிச்சு முன்னுக்கு வந்தவங்க நீங்களும் அப்படித்தான் நாளைக்கு உங்க பிள்ளைங்க நல்லா இருக்கணும் குடும்ப நல்லா இருக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும்ங்கறதுக்காக தானே எல்லாரும் பாடு படுறீங்க.
நாளைக்கு உங்க பிள்ளைங்க ஒரு டாக்டர் ஆகணும்னு உங்களுக்கு ஆசை இல்லையா ஒரு ஐபிஎஸ் ஆபிசர் ஆகனும்னு ஆசை இல்லையா எந்த லஞ்சமும் கொடுக்காமல் வாழ்வதற்கு முதல்ல நம்ம வழி நடத்துவோம்.
ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் அதற்கு நீங்கள் தாமரைக்கு வாக்களித்து ஒரு பெரிய வெற்றியை இந்தியாவே தலை நிமிர்ந்து நடக்கிற மாதிரி மூன்றாவது முறையாக நரேந்திர மோடிஜி அவர்கள் பிரதமராக ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.