Home செய்திகள் காவல் துறை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண்களையும் இழிவாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது ஒவ்வொரு பெண் காவல் அதிகாரியும் புகார் அளிக்க முன் வர வேண்டும்! மகளிர் காங்கிரஸ் தலைவி எம். ஹசீனா சையத் பேட்டி..

காவல் துறை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண்களையும் இழிவாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது ஒவ்வொரு பெண் காவல் அதிகாரியும் புகார் அளிக்க முன் வர வேண்டும்! மகளிர் காங்கிரஸ் தலைவி எம். ஹசீனா சையத் பேட்டி..

by Askar

காவல் துறை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண்களையும் இழிவாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது ஒவ்வொரு பெண் காவல் அதிகாரியும் புகார் அளிக்க முன் வர வேண்டும்! மகளிர் காங்கிரஸ் தலைவி எம். ஹசீனா சையத் பேட்டி..

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய யூ டியூபர் சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி எம். ஹசீனா சையத் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெண்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி எம் ஹசீனா சையத் கூறியதாவது;

பத்திரிக்கைக்கு என்று ஒரு மரபு உள்ளது..ஆனால் பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொண்டு நாம் உயர்வாக மதிக்கக்கூடிய பெண் காவலாளிகளையும், ஒட்டு மொத்த பெண்களையும் இழிவாக பேசிய சவுக்கு சங்கரை எதிர்த்து இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம்.. இவர் பேசியது நாட்டிலிருக்கும் அனைத்து உயர் பெண் காவல் அதிகாரிகள் அனைவரும் உயர் அதிகாரிகளிடம் ஒத்துழைத்துதான் உயர் பதவிக்கு வந்தார்களா? சவுக்கு சங்கர் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள் என்று அவர் மறந்து விடக்கூடாது..இதே கேள்வியை அவர் குடும்பத்தில் உள்ள பெண்களைப் பார்த்து பேசட்டுமா? ஆனால் அதுபோன்ற கேவலமான செயலை நாங்கள் செய்ய மாட்டோம்..

ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் ஒரு பெண் காவல் அதிகாரியாவது சவுக்கு சங்கர் மீது புகார் அளிக்க முன் வர வேண்டும். காவல் துறை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண்களையும்  இழிவாக பேசியுள்ளார்..இதுவே தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பாக கோரிக்கையாக வைக்கிறோம் எனவும் அவர் பேசினார்.

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!