Home செய்திகள் கீழக்கரை நகராட்சி நாய்களைப் பிடித்து நோய் தொற்று பரிசோதனை ! 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 04 ல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்பு கிளினிக் எதிர்புற பகுதியில் 8 நபர்களை நாய் கடித்தது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் அடிப்படையில் நகராட்சி பணியாளர்களைக் கொண்டு  பொதுமக்களுக்கு இடையூறாக  சுற்றித்திரிந்த 7 நாய்கள் பிடிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான பள்ளமோர்க்குளம் ABC மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழக்கரை கால்நடை மருத்துவமனை மருத்துவரிடம் நாய்களுக்கு ரேபீஸ் நோய் தொற்று ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி சார்பாக வேண்டுகோள் விடப்பட்டது . அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் நேரில் பார்வையிடப்பட்டு இராமநாதபுரம் மண்டல இணை இயக்குநர் கால்நடை மருத்துவதுறை அலுவலர்  முன்னிலையில் ரேபீஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் உணவு வழங்கப்பட்டு  (10 நாட்கள்) கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது . இதில் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா கால்நடை மருத்துவர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!