Home செய்திகள் கீழப்பாவூர் பேரூராட்சியில் 205 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்..

கீழப்பாவூர் பேரூராட்சியில் 205 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்..

by Abubakker Sithik

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 205 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்..

கீழப்பாவூர் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 205 பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் தேர்வு நிலை பேரூராட்சி முத்தாரம்மன் கோவில் திருமண மண்டபத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 205 பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சியானது 14.18 ச.கி.மீ. பரப்பளவு கொண்டு 11 குக்கிராமங்களை உள்ளடக்கிய ஒரு நகரப்பகுதியாகும். இப்பேரூராட்சியானது 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22231 ஆகும். தற்போதைய மக்கள் தொகை சுமார் 28000 நபர்கள் வசித்து வருகிறார்கள். இப்பேரூராட்சி பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் 8701, வணிக கட்டிடங்கள் 1163, தொழிற்கூடங்கள் 29 எண்ணம் இருந்து வருகிறது. நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடு குடிசையாகவோ அல்லது ஓட்டு வீடாகவோ இருக்குமாயின் அதனை முற்றிலுமாக அகற்றி புதிதாக காங்கிரீட் வீடு கட்டிகொள்ள கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகள் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளாக கட்டப்பட்டு மக்கள் குடியிருந்து வந்ததை முன்னிட்டு அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் அரசு மானியத்துடன் பயனாளிகள் தாங்களாகவே காங்கீரிட் வீடுகளாக கட்டி கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அத்திட்டத்தின் கீழ் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் முறையே விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதனை உரிய ஆவணங்களுடன் பரிசீலனை செய்து கீழ்கண்ட விவரப்படி பயனாளிகள் புதிதாக வீடுகள் கட்டி பயனடைந்து வருகின்றனர்.

2016-17 ம் ஆண்டுகளில் 270 பயனாளிகளுக்கு மதிப்பீடு தொகை (அரசு மானியம் பயனாளி பங்கு தொகையுடன்) 1215.00 இலட்சமும், 2017- 18 ம் ஆண்டுகளில் 100 பயனாளிகளுக்கு மதிப்பீடு தொகை (அரசு மானியம் பயனாளி பங்கு தொகையுடன்) 450.00 இலட்சமும் மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் 226 பயனாளிகள் மதிப்பீடு தொகை (அரசு மானியம் – பயனாளி பங்கு தொகையுடன்) 1017.00 இலட்சம் என மொத்தம் மதிப்பீடு தொகை (அரசு மானியம் பயனாளி பங்கு தொகையுடன்) 2,68,200 இலட்சம் 596 பயனாளிகள் பயனடைந்துளளனர். இந்நிலையில், தற்போது சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் ஆணையின்படி நடப்பு ஆண்டில் 205 பயனாளிகளுக்கு ரூ.922.50 இலட்சம் மதிப்பீட்டில் (பயனாளியின் பங்கு தொகையுடன்) அதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்று கொண்டிருக்கிறது. பயனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியம் ரூ.2,10,000 முதல் தவணையானது பயனாளிகள் அடித்தளமட்டம் வேலை முடிவுற்றவுடன் ரூ.50,000-ம், இரண்டாம் தவணை ஜன்னல் மட்டம் வேலை முடிந்தவுடன் ரூ. ரூ.50,000-ம், மூன்றாம் தவணையாக மேற்கூரை மட்டம் வேலை முடிந்தவுடன் ரூ.50,000-ம் நான்காவது தவணையாக அனைத்து வேலை முடிவு பெற்றபின் ரூ.60,000-ம் பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கட்டப்படும் வீட்டின் பரப்பளவு சுமார் 300 சதுரடிக்கு (28.22 ச.மீ) குறையாமல் கட்டப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கீழப்பாவூர் ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.எம்.ராஜன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜசேகர். உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அ. வில்லியம் ஜேசுதாஸ், செயல் அலுவலர் (கீழப்பாவூர்) மாணிக்கராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com