Home செய்திகள் திருமாவளவனை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய வேலூர் இப்ராஹிம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த விசிக மாநில நிர்வாகி! வத்தலக்குண்டுவில் பரபரப்பு..

திருமாவளவனை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய வேலூர் இப்ராஹிம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த விசிக மாநில நிர்வாகி! வத்தலக்குண்டுவில் பரபரப்பு..

by Askar

திருமாவளவனை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய வேலூர் இப்ராஹிம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த விசிக மாநில நிர்வாகி! வத்தலக்குண்டுவில் பரபரப்பு..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமை வகித்து பேசினார். கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் பேசும்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்த பொழுது அதற்கு மிகவும் துடித்தது யார் திருமாவளவன். ஏன் என்றால் இஸ்லாமியர்கள் சிந்திக்க கூடாது ,உணர்வு பூர்வமாக அவர்களை தூண்டி விட்டால் அவர்கள் போலீசில் சண்டை போடுவார்கள், வழக்கு வாங்குவார்கள், தூண்டி விட்டால்தான் ஆயுள் தண்டனை கைதியாக மாறுவான். அப்போதுதான் திருமாவளவன் போன்ற திருடர்களுக்கு, பட்டியல் சமூகத்தை தவறாக வழி நடத்துபவர்களுக்கு பகடைக்காயாக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். கடவுளை காட்டுமிராண்டி என சொல்லிவிட்டு நோன்பு காலத்தில் தொப்பியை தலையில் மாட்டிக் கொண்டு, நாங்கள் நோன்பு வைக்கின்றோம் என இழிவு படுத்துகிறார். சாதியவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் பட்டியல் சமூகத்தை தவறான வழிக்கு நடத்திக் கொண்டிருக்கும் மீசைய முறுக்கு திமிரு எழு என, திருப்பி அடி என, அடுத்த சாதி பெண்ணை இழுத்துக் கொண்டு வருவது தான் தன் சமூகத்திற்கு அடையாளம் என தவறாக வழி நடத்துகிற திருமாவளவன் போன்றவர்களை புறக்கணிக்க வேண்டும். அவர்களை புறக்கணித்தால் தான் இந்த தமிழகம் அமைதி பூங்காவாக வரும் என பேசியதால் வத்தலக்குண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருமாவளவன் சம்பந்தமாக வேலூர் இப்ராஹிம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவ்வழியாக சென்ற விசிகவின் மாநில நிர்வாகி உலகநம்பி வேலூர் இப்ராஹிமின் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் அவரை நோக்கி சத்தம் எழுப்பிக் கொண்டு சென்ற போது போலீசார் உலகநம்பியை தடுத்து நிறுத்தி அவர் பேசுவதை நாங்கள் வீடியோ எடுத்து வருவதாகவும் இது சம்பந்தமாக இப்பொழுது நீங்கள் எந்த பிரச்சினையும் செய்ய வேண்டாம் காலையில் வந்து புகார் மனு அளியுங்கள் எனக் கூறியுள்ளனர்.இதன் அடிப்படையில் திருமாவளவனை பற்றி அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி பெ.ச.உலகநம்பி வத்தலகுண்டு காவல் நிலையத்தில் வேலூர் இப்ராஹிம் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார் இந்த சம்பவம் வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com