Home செய்திகள் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு முறை பற்றிய நிகழ்ச்சி !  

விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு முறை பற்றிய நிகழ்ச்சி !  

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மண்டபம் ஊராட்சி  ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலை வலசை கிராமத்தில் தேனீ வளர்ப்பு முறைகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி அ. ஆஷிகா விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இதில் தேனீ வளர்ப்பிற்கு குறைந்த நேரம், குறைந்த பணம் மற்றும் கட்டமைப்பு போன்றவை மூலதனமாக தேவைப்படுகிறது. குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில் தேன் மற்றும் மெழுகினை தயாரிப்பது எளிதாகும். தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு தோப்புகளில் 30 சதவிகிதம் விளைச்சலும், பிற விவசாயங்களில் 20 சதவிகிதம் விளைச்சலும் கூடுதலாக அமையும் என்றனர். மேலும் தேனீ வளர்ப்பின் பயன்பாடு, தேவையான உபகரணங்கள், அறுவடை செய்யும் முறை மற்றும் அதற்கு பயன்படும் தொழில்நுற்பங்கள் பற்றியும், தேனீ வளர்பதற்காக அரசு வழங்கும் மானியம் குறித்தும் விவசாயிகளுக்கு மாணவி அ. ஆஷிகா எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com