Home செய்திகள் 5ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு..

5ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு..

by Askar

பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.5-ம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு தொகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர்.இன்றைய தேர்தலில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.இன்று மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.இந்நிலையில், 49 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com