Home செய்திகள் இ-பாஸ் எதிரொலி! ஊட்டி “ஊச்” கொடைக்கானல் “வெறிச்” சுற்றுலாப் பயணிகளுக்கு சோதனை! வியாபாரிகளுக்கு வேதனை!

இ-பாஸ் எதிரொலி! ஊட்டி “ஊச்” கொடைக்கானல் “வெறிச்” சுற்றுலாப் பயணிகளுக்கு சோதனை! வியாபாரிகளுக்கு வேதனை!

by ஆசிரியர்

இ-பாஸ் எதிரொலி! ஊட்டி “ஊச்” கொடைக்கானல் “வெறிச்” சுற்றுலாப் பயணிகளுக்கு சோதனை! வியாபாரிகளுக்கு வேதனை!

நீலகிரி மாவட்டத்திற்கு இ-பாஸ் எதிரொலியால் நீலகிரி மாவட்ட நுழைவாயிலில் வழக்கமான போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கோடை விடுமுறை என்பதாலும், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும், மக்கள் மலைப் பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வந்தனர். குறிப்பாக, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றலா தளங்களுக்கு மக்களின் வருகை அதிகம் அதிகரித்து இருந்தது.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. என்று (மே.07) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயம் என (மே.05) அன்று நீதிமன்றம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இ-பாஸ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. கூட்ட நெரிசலை இ-பாஸ் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் குறித்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தளங்களுக்குச் சென்று வர முடியும் என்றும் போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சாலையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்படாது என்று இ- பாஸ் முறை அமுல்படுத்தப்பட்டது. ஆனால் நடப்பது வேறாக உள்ளது இ-பாஸ் எதிரொலியால் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் தூரிப்பாலம்,கோத்தகிரி செக்போஸ்ட் அருகிலும் இ- பாஸ் பரிசோதனை சோதனை சாவடி அமைக்கப்பட்டு அங்கு காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இ- பாஸ் விண்ணப்பித்திருந்த சுற்றுலாப் பயணிகளை மட்டும் நீலகிரி மலைப் பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்கள். இ- பாஸ் முறை தெரியாமல் வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் விண்ணப்பிப்பதற்கு உதவி செய்கிறார்கள் ஆனாலும் அப்பகுதியில் தொலைபேசி நெட்வொர்க் குறைவாக இருப்பதால் ஒரு முறை கடவுச்சொல் கைபேசியில் வருவதில் காலதாமதம் ஆகிறது. ஏழாம் தேதி சிறப்பாக இயங்கிய அந்த இணையதளம் பலர் ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் வேகம் குறைவாக செயல்படுகிறது என்றும் சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர். மேலும் இ-பாஸ் முறை அமலுக்கு வந்ததும் பல சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளிலுக்கு சுற்றுலா வந்தால் பெரும் சிரமம் இருப்பதாக எண்ணி சுற்றுலா வருவதை தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக உலகப் பிரசித்தி பெற்ற நீலகிரியில் நடைபெறும் மலர் கண்காட்சியை காண்பதற்கு பல லட்சக்கணக்கான வந்து செல்வார்கள்.

இன்று மலர் கண்காட்சி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் கோடை காலத்திற்கு முன்பு வழக்கமாக வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை விட மிகக் குறைவான சுற்றுலா வாகனம் தான் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் நீலகிரி மலைப்பாதைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் இலகுவாக சென்று வருகிறது.

கடந்தாண்டு இ- பாஸ் முறை இல்லாத போது மலர் கண்காட்சியைக் காண ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்து விடுவார்கள் ஆனால் இந்த ஆண்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி முதலீடு செய்த வியாபாரிகள் தங்களின் வியாபார பொருட்கள் விற்பனை ஆகாமல் வேதனையில் தவித்து வருகின்றனர்.

தற்போது ஊட்டி கோத்தகிரி, மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைகளில் இ- பாஸ் சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரமாகக் காத்திருந்து பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த இரு இடங்களிலும் மாவட்ட நிர்வாகத்தால் சாலைகளை விரிவுபடுத்தி அதிக ஒளி வீசக்கூடிய மின்விளக்குகளை அமைத்தும் கண்காணித்து வருகிறார்கள்.

ஏற்கனவே அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் இந்தச் சோதனைச் சாவடியில் அரசு துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் நீலகிரி மாவட்ட மக்களுக்கு அரசால் நடைபெறக்கூடிய பல திட்டங்கள் நடைபெறுவதும் காலதாமதம் ஏற்படும் சூழலும் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்து வருகின்றனர்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்றும் கொண்டை ஊசி வளைவுகளில் மெதுவாகச் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியும் தங்களின் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

எது எப்படியோ இந்த ஆண்டு நீலகிரி கோடை விழா சொதப்பலோ சொதப்பல் இன்று மலர் கண்காட்சிக்கு பிறகு முழு விவரம் தெரியவரும் என ஊட்டி வாசிகள் புலம்புகின்றனர்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நகரில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சோதனைச்சாவடி அமைத்து இ-பாஸ் பெற்ற சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் மட்டும் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெற முயல்வதால் இ-பாஸ் இணையதளம் முடங்கி வருகிறது என புகார் எழுந்துள்ளது.கொடைக்கானலுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 72 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள், மே மாதத்தில் 1.85 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். அதே சமயம் இந்தாண்டு ஆண்டு ஏப்ரலில் 73 ஆயிரம் பேரும், இந்த மாதத்தில் நேற்று வரை 27 ஆயிரம் பேர் மட்டுமே வந்துள்ளனர்.

கொடைக்கானலில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவால், நகரில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!