Home செய்திகள் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் HOME அணியே வெற்றி என்ற STREAKக்கு முடிவுரை எழுதிய பெங்களூரு vs கொல்கத்தா போட்டி..

தொடர்ச்சியாக 9 போட்டிகளில் HOME அணியே வெற்றி என்ற STREAKக்கு முடிவுரை எழுதிய பெங்களூரு vs கொல்கத்தா போட்டி..

by Askar

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 10ஆவது போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேமரூன் க்ரீன் 33 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி மட்டுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 83 ரன்கள் எடுக்க ஆர்சிபில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.

பின்னர், 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கேகேஆர் களமிறங்கியது. இதில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஆர்சிபி வீரர்களின் பவுலர்களை சும்மாவே விடவில்லை. சரமாரியாக வெளுத்து வாங்கினர். மீண்டும் ஒரு முறை பெங்களூரு கொல்கத்தாவின் கோட்டை என்று நிரூபித்துக் காட்டினர்.

பில்ப் சால் 30 ரன்னிலும், சுனில் நரைன் 22 பந்துகளில் 5 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷ்ரேயார் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசில ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் அடித்து கொடுத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

இறுதியாக கேகேஆர் 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஹோம் மைதான அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதுவரையில் நடந்த 9 லீக் போட்டியிலும் ஹோம் மைதான அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த டிரெண்டை மாற்றி முதல் முறையாக கேகேஆர் பெங்களூருவில் வெற்றி கண்டுள்ளது.

அதோடு, ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி 5 போட்டிகளிலும் கேகேஆர் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது 6ஆவது போட்டியிலும் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இதுவரையில் இரு அணிகளும் மோதிய 33 போட்டிகளில் இந்த போட்டி உள்பட 19 போட்டிகளில் கேகேஆர் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!