
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கிண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், இவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்று வளர்த்து வருகிறார். வெற்றிவேல் வயலில் இன்று (18/07/2020) மதியம் கிணற்றின் அருகே காளைக்கு உணவு வைத்துவிட்டு காளையின் கயிற்றை சரியாக கட்டாமல் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் காளை அருகே இருந்த 60 அடி கிணற்றில் 20 அடி தண்ணீரில் தவறி விழுந்துள்ளது, காளையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திருமங்கலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் ஜெயராணி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காளையை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டனர்.
காளை கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.