Home செய்திகள் ராமநாதபுரத்தில் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் ! நடுரோட்டில் அமர்ந்திருந்த பெற்றோர்கள்!!   

ராமநாதபுரத்தில் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் ! நடுரோட்டில் அமர்ந்திருந்த பெற்றோர்கள்!!   

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 நீட் தேர்வு மையங்களில் சுமார் 2229 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் இந்த நிலையில் ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி மையத்தில் சுமார் 900 பேர் மையத்தில் தேர்வு எழுதுகின்றனர் . தற்போது கொளுத்துகின்ற அக்னி நட்சத்திரம் வெயில் நீண்ட வரிசையில் காத்திருந்து மாணவ மாணவிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு மையத்தின் வெளிப்பகுதியில் சாமியானா பந்தல் போதுமான அளவுக்கு போடப்படவில்லை அதனால் மாணவ மாணவிகள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் நிலவியது. ஒரு மணிக்கு தேர்வு ஆரம்பிக்க கூடிய நிலையில் 11 மணிக்கு மாணவ மாணவிகள் வரிசையில் நிற்க துவங்கி விட்டனர். தற்போது வெயில் காலம் என்பதாலும் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க முடியாத நிலையில் மாணவ மாணவிகள் சோர்வடையக்கூடிய சூழல் நிலவியது .மேலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பாதுகாப்புக்கு கூடவே வந்ததால் கூடுதலாக கூட்டம் நிரம்பியது. இதனால் வெயிலின் வெப்பம் தாங்காமல் மாணவ மாணவிகளோடு பெற்றோர்களும் நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்தனர்.    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெயிலின் வெப்பத்தை உணர்ந்து கூடுதலாக சாமியானா பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் கழிப்பறை வசதிகள் அமைத்து கொடுத்திருக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் பெற்றோர்கள் காத்திருந்தது அனைவரும் மனதையும் கவலை அடைய செய்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!