Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நெல்லையில் கொரோனா தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு..

நெல்லையில் கொரோனா தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு..

by ஆசிரியர்

நெல்லையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலி காட்சி மூலம் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தார்.நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது:

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். உயர்தர உயிர்காக்கும் மருந்துகள் அரசிடம் உள்ளன. தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனையாக நெல்லை மருத்துவமனை உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சைக்காக அதிவேக உயர் ஓட்ட ஆக்ஸிஜன் கருவிகள், 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், 385 ஒன்றியங்களிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி கொண்ட மருத்துவமனைகள் உள்ளதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், சிகிச்சையின் பின் குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!