Home செய்திகள் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்’ ரமலான் வாழ்த்துச் செய்தி!

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்’ ரமலான் வாழ்த்துச் செய்தி!

by Askar

 

‘தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்’ ரமலான் வாழ்த்துச் செய்தி!

உலகத்தில் வாழக்கூடிய முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மிகப் பெரும் பாக்கியமாகவும், இறைவன் புறத்திலிருந்து அருள் நிறைந்த மாதமாகவும் புனித ரமலான் மாதம் கருதப்படுகிறது.

இந்தப் புனிதமிகு மாதத்தில் பகல் முழுவதும் உண்ணா நோன்பிருந்து,இரவில் விழித்து இறைவனை வணங்கி,மனோஇச்சை மற்றும் பாவமான காரியங்களிலிருந்து விலகி இருந்து மனிதனை பக்குவப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மாதம் புனித ரமலான் மாதம் ஆகும்.

இன்றைய சூழ்நிலையில் முழு உலகையும் கொரோனா என்னும் வைரஸ் உலுக்கிப் போட்டிருக்கிறது. ஐவேளைத் தொழுகைகள்,ஜும்மா தொழுகை,ரமலான் மாத தொழுகைகள் மற்றும் அமல்கள் என எதுவும் செய்ய முடியாமல் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் ஒருவிதமான கலக்கத்துடன் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

இந்த சூழ்நிலைகள் அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து நம்மைநோக்கி ஏற்படுத்தப்பட்ட விஷயம் என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இயலாதோருக்கு வழங்கி வாழும் தனவந்தர்கள், அனுதினமும் மக்களுக்கு சேவையாற்ற கூடிய உயர் பண்பாளர்கள், மக்களுக்காக உழைக்கக்கூடிய உத்தமர்கள் என அனைவரும் இறைவனிடத்தில் மகத்தான கூலி பெற்றவர்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்குள்ள விரோதங்களை மறந்து, சகோதரத்துவத்தை பேணி,சமூக நல்லிணக்கத்தை பின்பற்றி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அன்பையும் அரவணைப்பையும் முழு உலகத்திற்கும் விதையாய் வீச வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

இந்த ரமலான் இறைவன் நமக்களித்த சோதனை என்பதை விளங்கி வரக்கூடிய காலங்களில் இழந்ததை விட சிறந்ததை இறைவன் முழு உலக மக்களுக்கும் அளித்திட எல்லாம் வல்ல இறைவன் உதவிட கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்கின்றோம்.

உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்தார் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

இவன்,

அ.ஜெ.சகாயாரஜ், மாநிலத் தலைவர்.

பா.பிரதீப் குமார், மாநிலப் பொதுச் செயலாளர்.

டி.இளையராஜா, மாநிலப் பொருளாலர்.

ஜெ.அஸ்கர், மாநில தலைமைச் செய்தி தொடர்பாளர்.

‘தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்’

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!