Home செய்திகள் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் அமெரிக்க வாழ் தமிழர்களிடையே மு.தமிமுன் அன்சாரி MLA காணொளி உரை!

காலத்தின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் அமெரிக்க வாழ் தமிழர்களிடையே மு.தமிமுன் அன்சாரி MLA காணொளி உரை!

by Askar

காலத்தின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் அமெரிக்க வாழ் தமிழர்களிடையே மு.தமிமுன் அன்சாரி MLA காணொளி உரை!

வட அமெரிக்கா தமிழக முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் ZOOM காணொளி வழியே கருத்தரங்கம் நடைப்பெற்றது.

அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

புலம் பெயர்ந்து சென்றாலும், தமிழ் உணர்வோடு நீங்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தாயகத்தின் வாழும் மக்களின் துயர் துடைக்க இந்நிகழ்ச்சியின் வழியாக கொரணா நிவாரண நிதியை வசூலிப்பதும் பாராட்டத்தக்கது.

இந்திய நேரம் விடியற்காலை 2:30 மணிக்கு இந்நிகழ்ச்சியை தொடங்கி உள்ளோம்.

அமெரிக்காவில் 3 வகையான நேர மாற்றங்கள் உள்ளது. இப்போது கலிபோர்னியாவில் பகல் 2 மணியாகவும், நியுயார்க்கில் மாலை 5 மணியாகவும் உள்ளது.

ஆனாலும் பொது சேவைக்காக நேரம் பாராது கூடியுள்ளோம்.

தமிழகத்தில் இதுவரை ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு நீங்கள் உதவியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்நிகழ்வில் நிலாபுதீன், அமெரிக்க தமிழ் வானொலியின் நெறியாளர் ஆறுமுகம் பேச்சுமுத்து, தோப்புத்துறை நூர்தீன், கார்த்திக் பெருமாள், அபுபக்கர், அப்துல்லா ஜெகபர்தீன் என பலரும் கூடியிருப்பது நமது பண்பாட்டின் சிறப்பாகும். இது தமிழ்நாட்டிற்கே உரியதாகும்.

தமிமுன் அன்சாரிக்கு கொள்கை உண்டு. மார்க்கம் உண்டு. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் என்பவர் சமூகநீதியாளர் ஆவார். நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் ஆவார்.

இந்த புரிதல் இருப்பதால்தான் என்னை அழைத்திருக்கிறீர்கள் என கருதுகிறேன்.

எமது பணிகள் அனைவருக்குமானது. விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என குரலற்ற மக்களின் குரலை எதிரொலிக்கிறோம். தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும் போராடுகிறோம்.

அது போல்தான் கொரணா பேரிடரிலும் பணியாற்றுகிறோம்.

இன்று உலகமே ஊரடங்கில் இருக்கிறது. ஒருவருக்கொருவர் உதவிடும் நிலை உள்ளது.

முதன் முதலாக மனிதர்கள் அடுத்த வீட்டுக்காரர்கள் நலமாக இருக்கிறாரார்களா? என அக்கறை காட்டுகிறார்கள்.

அப்போதுதான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற நிலையை கொரணா உருவாக்கியிருக்கிறது.

பிறர் நலன் நாடும் சூழல் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இன்று இந்தியாவில் ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டு 63 நாட்கள் ஆகிறது.

இன்றோடு நாடு முழுக்க 1 லட்சத்து 31 ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 15 ஆயிரத்து 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அளவில் 104 பேரும், இந்திய அளவில் 3868 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் பிப்ரவரி 8 அன்று கொரணா தொற்று காரணமாக முதல் உயிர் பலி ஏற்பட்டது.

ராகுல் காந்தி அவர்கள் பிப்ரவரி 12 அன்று, இதில் இந்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டார்.

அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் ஊரடங்கு குறித்து வலியுறுத்தினார்.

ஆனால் மார்ச் 22 அன்று தான் பிரதமர் திடிர் ஊரடங்கை அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அப்போதே நடவடிக்கைகளை முடுக்கியிருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்கலாம்.

ஊரடங்கு இப்போது நான்காம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனால் பல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. மாதம் 15 ஆயிரம் சம்பாதித்தவர்கள் எல்லோரும் கையேந்தும் நிலைக்கு வந்து விட்டார்கள். மாதம் 30 ஆயிரம் வரை சம்பாதித்தவர்கள் வெளியே சொல்ல முடியாத சங்கடத்தில் உள்ளனர்.

தொழிலாளர்கள் நிலை பரிதாபமாக உள்ளது.

நடந்தே தங்கள் மாநிலங்களுக்கு செல்கிறார்கள். 10 வயது நிரம்பாத பிள்ளைகளும் நடக்கிறார்கள். முதியவர்களை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

வழியிலேயே கர்ப்பிணிகள் பிரசவிக்கிறார்கள். வழியிலேயே மரணங்களும் நடக்கின்றன. அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட அவலம் இது.

மத்திய அரசு இதுவரை மக்களுக்கு நேரடி நிதி உதவிகள் எதையும் செய்யவில்லை.20 லட்சம் கோடி என்ற பிரதமரின் அறிவிப்பில் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடிதான் நிதி ஒதுக்கீடு உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப் படி, இந்த கிரிமியின் தாக்கம் ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் என நம்பப்படுகிறது.

இதன் பொருளாதார பாதிப்பு அடுத்தாண்டு வரை நீடிக்கும்.

வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களில் கணிசமானோர் வேலை இழந்து தாயகம் திரும்புவது தொடங்கியுள்ளது. இது பெரும் பொருளாதர நெருக்கடிகளை நம் நாட்டில் உருவாக்கப் போகிறது..

சர்வதேச அளவில் பொருளாதாரம் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி, சுற்றுலா துறை, விமானப் போக்குவரத்து துறை ஆகியன பெரும் பாதிப்பை சந்திக்கும்.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஒரு புறம் வீழ்ச்சியை சந்திக்கும். மறுபுறம் தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும் .

முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றுக்கு பிறகு உலகம் சந்தித்த நெருக்கடிகள் இப்போதும் உருவாவதை தவிர்க்க முடியாது.

காலத்தின் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். அதை கொர ணா ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த துயரத்திலிருந்து உலகம் மீள இறைவனிடம் பிரார்த்திப்போம். இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நமது ஆறுதலை தெரிவிப்போம்.

உங்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் எனும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை கூறி, உரைக்கு திரையிட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சுமார் 2 1/2 மணி நேர நிகழ்ச்சியில் உரை,கேள்வி – பதில், கலந்துரையாடல் என பலவும் வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் பல்வேறு மகாணங்களை சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் இதில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!