Home செய்திகள்கீழக்கரை செய்திகள் 144 தடை உத்தரவு சமயத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதை முறைப்படுத்த மதுரையில் அனுமதி வழங்கல் தொடக்கம்..

144 தடை உத்தரவு சமயத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதை முறைப்படுத்த மதுரையில் அனுமதி வழங்கல் தொடக்கம்..

by ஆசிரியர்

இன்று 22.04.2020-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 144 தடை உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் அத்தியாவசிய தேவைக்காக பொருட்களை அன்றாடம்  கொண்டு செல்ல வாகனங்களின் பயன்பாடு மிகவும் தேவையானது என்பதால் அதை முறைபடுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையாக அனுமதி வழங்கி வருகிறார்கள்.

மதுரை மாநகர காவல்துறை தற்போது வாகன பயன்பாட்டில் உள்ள முறைகேடுகளை தடுக்கும் வகையில் காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் விக்ரம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் குழுமத்தின் துர்யோஸிஸ் தனியார் மென்பொருள் நிறுவனம் இதற்கான பிரத்யேக செயலி ஒன்றை தயார் செய்துள்ளார்கள். அந்த மொபைல் செயலியை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., மற்றும் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு கார்த்திக் IPS., ஆகியோர் கோரிப்பாளையம் தேவர்சிலை அருகே வைத்து தல்லாகுளம் உதவி ஆணையர் மூலமாக இச்செயலி வழியாக வாகன தணிக்கை செய்ய இச்செயலியை பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்ததோடு மதுரை மாநகர காவல்துறையினர் வாகன தணிக்கை செய்யும்போது இச்செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழங்கும் வாகன அனுமதியில் QR Scan Code இடம் பெறுவதால் அதனை இச்செயலி மூலம் காவல்துறையினர் எளிதில் Scan செய்து வாகன அனுமதியின் முறை குறித்து துள்ளியமாக அறிந்து அதன்படி அவ்வாகனத்தை அனுப்பமுடியும். இதனால் அனுமதியின்றி சாலையில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் தேவையற்ற வகையில் வாகனத்தை இயக்குவதையும் முற்றிலும் கட்டுப்படுத்த முடியும். தனிநபர் தன் அவசிய தேவைகளுக்காக வெளிவரும்போது அதுகுறித்து இச்செயலி மூலம் குறிப்பு எடுக்க முடியும். அதேநபர் தனது காவல்நிலைய எல்லை வரம்புகளைத் தாண்டி ஒவ்வொரு முறையும் வரும்போதும் அவரது நடவடிக்கையை இச்செயலி வழியாக துல்லியமாக அறிந்து சட்டத்தை மீறும் சமயம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வழிவகைசெய்யும்.

இச்செயலி மூலம் எந்த வாகனம், எந்த இடத்தில் வாகன சோதனை செய்யப்பட்டது. எத்தனை முறை சோதனைக்குள்ளாகி உள்ளது என்பதையும், எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நேரங்களில், அதிகமான வாகனங்கள் வெளிவருகின்றன என்றும் எவ்வளவு வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன என்பது பற்றியும் எவ்வளவு வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவரும். மதுரை மாவட்ட ஆட்சியரக அலுவலகம் வழங்கும் QR Scan Code உள்ள அனுமதிச்சீட்டு அல்லாது வழங்கப்படும் அனுமதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், QR Scan Code உடன் கூடிய மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி யாரும் சாலையில் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அதைமீறுபவர்கள் மீது 179 மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் Spot fine Rs.500/- அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து அத்துமீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், வியாபாரிகள் அரசாங்க ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் மாவட்ட நிர்வாகம் மூலம் முறையான அனுமதி பெற்ற பிறகே வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!