Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இளைஞரின் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் சர்ச்சையான வீடியோ – சட்டபூர்வ நடவடிக்கையில் எஸ்டிபிஐ கட்சி மற்றும் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம்..

இளைஞரின் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் சர்ச்சையான வீடியோ – சட்டபூர்வ நடவடிக்கையில் எஸ்டிபிஐ கட்சி மற்றும் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம்..

by ஆசிரியர்


இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இஸ்லாமியர்களும் இந்து சமூக மக்களும் அண்ணன் தம்பிகளாக மாமன் மச்சான்களாக சகோதரப் பாசத்துடன் நட்பு பாராட்டி பழகி வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை பகுதியில் சமுதாய ஒற்றுமையை மக்களின் நிம்மதியை சீர் குலைக்கும் விதமாக கீழக்கரையை சேர்ந்த ஒரு இளைஞர் சமூக வலைத்தளங்களில் மிக மோசமான வார்த்தைகளால் கீழ்த்தரமான முறையில் அசிங்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு சம்பந்தமாக எஸ்டிபிஐ கட்சி மற்றும் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், “கீழக்கரை முழுவதும் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞரின் சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் ஆன வீடியோ எஸ்டிபிஐ கட்சியின் பார்வைக்கு வந்தவுடன் சட்டரீதியான நடவடிக்கைகளை மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லாஹ் அவர்களால் இராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது கண்டிப்பாக இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார்.  முஸ்லிம்களை மிகவும் தரக்குறைவாக பேசிய அந்த இளைஞர் போன்ற பல நபர்கள் இது மாதிரியான வீடியோக்கள் மற்றும் ஸ்டேட்டஸ்கள் தொடர் கதையாகவே உள்ளது, ஆகவே மாவட்ட நிர்வாகம் இம்மாதிரியான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் கூறுகையில் “இந்த விஷயத்தில் எவரும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டக் கூடாது. சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கீழக்கரையில் அண்ணன் தம்பிகளாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் சூழலில், இது போன்ற விஷயங்களை நாம் கையாளும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த பிரச்சனையை மையக் கருவாக வைத்து இருதரப்பு மக்களுக்கிடையில் வன்மத்தை விதைத்திடக் கூடாது. வன்மத்தை விதைத்து யாரும் குளிர் காய்ந்திட அனுமதித்திடக் கூடாது. சட்டத்தை கையிலெடுக்க யாருக்கும் எந்த உரிமையுமில்லை.

சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையில் உரிய முறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் சட்டம்.. தன் கடமையை செய்யும். சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வரை அனைவரும் சட்டத்தை மதித்து பொறுமை காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!