Home செய்திகள் நெல்லை ஊரடங்கு மீட்பு முகாமில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்-சமூக விலகலை பேணி மகிழ்ச்சியுடன் கண்டுகளித்த பொதுமக்கள்..

நெல்லை ஊரடங்கு மீட்பு முகாமில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்-சமூக விலகலை பேணி மகிழ்ச்சியுடன் கண்டுகளித்த பொதுமக்கள்..

by Askar

நெல்லை ஊரடங்கு மீட்பு முகாமில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்-சமூக விலகலை பேணி மகிழ்ச்சியுடன் கண்டுகளித்த பொதுமக்கள்..

தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாநகரில் ஊரடங்கின் போது மீட்கப்பட்ட ஆதரவற்றோர் 105 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள டவுண் அரசு பள்ளி முகாமில் மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து திறந்த வெளி திரையரங்கு ஏற்பாடு செய்தனர். எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை 22.04.2020 புதன்கிழமை மாலை ஒளிபரப்பினர். இந்த திரைப்படத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

முன்னதாக பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் திரை கட்டப்பட்டது. மைதானத்தில் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் ஏற்படுத்தி முதியோர்கள் அமர்ந்து இருந்தனர்.

திரைப்படத்தின் இடையிடையே மக்களுக்கு டீ,காபி,ஸ்னாக்ஸ் வழங்கப்பட்டது. இந்த முகாமில் மூன்று வேளை உணவு இருவேளை டீ காபி போன்றவை மீட்கப்பட்ட நாட்களில் இருந்து தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மாநகராட்சி மற்றும் R -soya எனும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வலர்கள் பொருள் உதவியும் பண உதவியும் செய்து வருகின்றனர்.

50 வருடத்திற்கு பிறகு தியேட்டரில் பார்த்த படத்தை மீண்டும் இன்று திரையில் பார்த்து ரசிப்பதாக ஒரு மூதாட்டி தெரிவித்தது, உண்மையில் ஆதரவின்றி தவித்த முதிய மக்களுக்கு என்ன தேவையோ ! அதை கொண்டு செல்வதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை உணர்த்தியது…

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!