Home செய்திகள் ஜூன் முதல் வாரம் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுமா..?

ஜூன் முதல் வாரம் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுமா..?

by ஆசிரியர்

ஜூன் முதல் வாரம் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுமா..?

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதியே முடிந்து விட்டாலும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது.இதில் தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது. ஆனால் பிரமாண்ட்ட வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் சில தொகுதிகளில் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளே சரியாக வேலை செய்யாமல் உள்ளடி வேலை செய்ததாக கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளது.இதனால் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட தொகுதியில் என்னென்ன பிரச்சனை நடந்தது என்பது பற்றி விசாரித்து வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் தேர்தல் முடிவு வந்ததும் கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய அவர் முடிவெடுத்துள்ளார் என்று தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் மத்தியில் ஆட்சியில் பங்கெடுப்பது குறித்த வேலைகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்துவார். இந்த பணிகள் ஜூன் 10-ந்தேதி வரை இருக்க வாய்ப்புள்ளது. அப்படி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் டி.ஆர்.பாலுவுக்கு ரெயில்வே இலாகாவும், கனிமொழி, ஆ.ராசா போன்றோருக்கு முக்கிய இலாகா கிடைக்கும் என்றும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.ஒருவேளை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் ஜூன் முதல் வாரமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையை அதிரடியாக மாற்றி அமைத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் மற்றும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் கிடைத்துள்ள விசயங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது. அதன்படி அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. 4 பேர் நீக்கப்பட்டு 4 பேர் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.அது மட்டுமின்றி உட்கட்சி பிரச்சனைகளை சரி செய்யும் வகையில் தி.மு.க.வில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் ஜூன் 2-வது வாரம் இருக்கும் என்று தி.மு.க.வினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.கட்சி நிர்வாகிகள் பலர் பொறுப்புகளை எதிர் பார்ப்பதால் கட்சி ரீதியில் மாவட்டங்களை அதிகப்படுத்தி, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதன் மூலம் 2026 சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற முடியும் என கருதுகின்றனர்.எனவே அடுத்த மாதம் ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அறிவாலய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!