Home செய்திகள்மாநில செய்திகள் ஐதராபாத்தை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா..

ஐதராபாத்தை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா..

by Askar

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதின.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா போல்ட் முறையில் அவுட் ஆனார். அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசிய நிலையில் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் அவுட் ஆனார். மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ரன்னில் அவுட் ஆனார். கொல்கத்தா வீரர்களின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஷபாஸ் அகமது 8 ரன்னிலும், அப்துல் சமத் 12 ரன்னிலும், கிளாசன் 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில், ஐதராபாத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா வீரர்களில் ரசல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ், நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சுனில் நரைன் 6 ரன்களில் வெளியேற , மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 39 (32) ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் அய்யர் 52 (26) ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவரகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 114 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் சபாஸ் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. முன்னதாக கடந்த 2012, 2014 -ல் ஐ.பி.எல். சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!