Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குழந்தைகள் சேர்க்கை; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குழந்தைகள் சேர்க்கை; மாவட்ட கலெக்டர் தகவல்..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை; மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG/1Std) சேர்க்கை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் வரும் 28.05.2024 அன்று முற்பகல் 09.00 மணிமுதல் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு 12(1) (சி) ன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG/1Std) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கும் வகைக்கு தென்காசி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 185 பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட மொத்த இடங்கள் (IN TAKE CAPACITY) 1728 ஆகும். இதில் 19 பள்ளிகளுக்கு மிகுதியான மாணவர்கள் விண்ணப்பம் செய்யவில்லை. 166 பள்ளிகளுக்கு மட்டும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மேற்படி மிகுதியாக விண்ணப்பம் செய்துள்ள 166 பள்ளிகளுக்கான (IN TAKE CAPACITY) 1603 ஆகும். இதற்கான சேர்க்கை குலுக்கல் முறையில் நடைபெறவுள்ளது. சேர்க்கை நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு துறை பிரதிநிதியாக அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் முதன்மை கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு -12(1) (சி) ன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG/1Std) விண்ணப்பம் செய்துள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!