Home செய்திகள் நடிகர் சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் காலமானார்: இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நிலக்கோட்டை அருகே நடைபெற உள்ளது!-சரத்குமார் வேதனை..

நடிகர் சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் காலமானார்: இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நிலக்கோட்டை அருகே நடைபெற உள்ளது!-சரத்குமார் வேதனை..

by Askar

நடிகர் சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் காலமானார்: இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நிலக்கோட்டை அருகே நடைபெற உள்ளது!-சரத்குமார் வேதனை..

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘மாயி’ படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996-ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமான சூர்ய பிரகாஷ், பெண் ஒன்று கண்டேன், திவான், அதிபர், வருஷ நாடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவரது மரணத்திற்கு சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எஸ் வாடியில் இன்று மாலை நடைபெற உள்ளது. சூர்ய பிரகாஷ் மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரத்குமார், “என்னுடைய நடிப்பில் மாயி , திவான் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய என் அன்பு நண்பர் சூர்யபிரகாஷ் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவரது திடீர் மறைவு என்னை நிலைகுலையச் செய்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!