Home செய்திகள் நெல்லையில் சுகாதார,தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி..

நெல்லையில் சுகாதார,தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி..

by mohan

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தடுப்பு மற்றும் சுகாதார பணிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதார பணியாளர்கள்,தூய்மைப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பொது மக்கள் வெளியே வர தயங்கும் நிலையில் நெல்லையில், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளான அனைத்து இடங்களிலும் தங்கள் உயிரை பணையம் வைத்து சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தூய்மை பணியாளர்கள் நலனில் சுகாதார பணியாளர்கள்,தூய்மை பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டு ஊரடங்கு காலத்தில் இருந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதிலும், கடந்த 4 மாதங்களாக தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வாரம் வாரம் தொடர்ந்து வழங்கி வருகிறார்

கடந்த வாரங்களில் கபசுர குடிநீர்,வாழைப்பழம், மேலும் கையுறை, முகக்கவசம் ஆகியவை வாரம் வாரம் வழங்கப்பட்டு வருகிறது.கைகழுவும் திரவமும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு நோய் தொற்று ஏற்படாமல் பணி முடித்தவுடன் கைகளை நன்கு கழுவ பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி 10.07.2020 இன்று பாளை மண்டல பகுதியில் பணிபுரியும் 250 தூய்மை பணியாளர்களுக்கும்,250 டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கும் சத்துக்கள் நிறைந்த MILO பாக்கெட்களை பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் அவர்களால் வழங்கப்பட்டது. உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன், மேற்பார்வையாளர் முருகன், தூய்மை இந்தியா பரப்புரையாளர் கனகப்ரியா உள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட பணியாளர்கள் மாநகராட்சி ஆணையாளருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!