Home செய்திகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் டிரோன்கள் விமானங்கள் பறக்க தடை; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் டிரோன்கள் விமானங்கள் பறக்க தடை; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

by Abubakker Sithik

வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் டிரோன்கள் விமானங்கள் பறக்க தடை; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக்குறிச்சி USP கல்லூரி குழும வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக (Drones No Fly Zone) அறிவிக்கப்பட்டுள்ளதால் ட்ரோன்கள் (Drones), ஆளில்லாத விமானங்கள் (Remotely Piloted Aircraft System RPAS) பறக்க தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.

இது குறித்த செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024, 37.தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 19.04.2024 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கொடிக்குறிச்சி USP கல்லூரி குழுமம் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேற்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக்குறிச்சி USP கல்லூரி குழுமம் வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக (Drones No Fly Zone) அறிவிக்கப்பட்டுள்ளதால், மேற்படி பகுதியில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை ட்ரோன்கள் (Drones) ஆளில்லாத விமானங்கள் (Remotely Piloted Aircraft System -RPAS) பறக்க தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!