Home செய்திகள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கொரணா பாதிப்பு எதிரொலி சமூக விலகல் மற்றும் விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்றால் கடை மூடப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் எச்சரிக்கை

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கொரணா பாதிப்பு எதிரொலி சமூக விலகல் மற்றும் விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்றால் கடை மூடப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் எச்சரிக்கை

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் பொறுத்தவரை கடந்த 20 தினங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரானா தொற்றுநோய் ஏற்பட்டு பல்வேறு வகையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒன்றிய அளவில் அதிக அளவில் பரவி வருவதாக அதிகாரியும் மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளும் பல்வேறு வகையில் ஆய்வு செய்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.         இதில் முக்கியமாக குறிப்பிடக்கூடிய நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு மதுரை மாவட்டத்தில் இருந்தும், தேனி மாவட்டத்தில் இருந்தும் பல்வேறு விவசாயிகள் பூக்கள் விற்பனை செய்வதற்காக நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு தினந்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் வருகின்றார்கள். இதன் மூலமாக தொற்று பரவும் என சில சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டை மூட வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

        இருப்பினும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழக்கூடிய போ மார்க்கெட்டை அரசு பல்வேறு வகையில் எச்சரிக்கையும் அதேசமயம் மிகவும் பாதுகாப்புடன் நடத்த கடுமையான கட்டுப்பாடுகளுடன் நிலக்கோட்டை பூ மார்க்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென அண்ணன் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு ஆய்வு செய்தார்.       அப்போது அங்கு கடை வியாபாரிகளிடம் வருகின்ற விவசாயிகள் பலர் படிப்பறிவும் அதேசமயம் தற்போது ஏற்பட்டுள்ள தொற்று நோய்களின் விழிப்புணர்வு தன்மையும் இல்லாமல் இருக்கின்றார்கள் விவசாயிகளுக்கு பூமர் கடை வியாபாரிகள் உடனடியாக இது சம்பந்தமாக விளக்கம் அளித்தோம் விழிப்புணர்வுடன் கூடிய முகக்கவசம் இலவசமாக வழங்க வேண்டும் வழங்கவில்லை என்றால் சரியான சமூக வளங்களை கடைபிடிக்கவில்லை என்றால்  பூ கடைகளை அடைக்க வேண்டிய  நிர்பந்தம் ஏற்படும் என எச்சரிக்கை செய்தார்.      இந்த ஆய்வின்போது திண்டுக்கல் மாவட்ட பொது சுகாதார மருத்துவர் நளினி, நிலக்கோட்டை தாசில்தார் யூஜின், நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், மணி, வருவாய் ஆய்வாளர் சென்னா கிருஷ்ணன் , கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!