
மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே போலீசாரில் பலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.இந்த நிலையில் மதுரை மாநகர போலிஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.அதில் மதுரை மாநகர பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து போலீசாருக்கும் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ்ஆக்சி மீட்டர் ஆகிய கருவிகளின் வாயிலாக காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் பரிசோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.இதனை அடுத்து மதுரை மாநகரில் பணியில் உள்ள அனைத்து போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.