Home செய்திகள் “முழுமையான ஊரடங்கு நேரத்தில் பால் விநியோகம் குறித்த குழப்பமான அறிவிப்பால் பால் தட்டுப்பாடு ஏற்படும்:-தமிழக அரசு தெளிவுபடுத்த பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்..

“முழுமையான ஊரடங்கு நேரத்தில் பால் விநியோகம் குறித்த குழப்பமான அறிவிப்பால் பால் தட்டுப்பாடு ஏற்படும்:-தமிழக அரசு தெளிவுபடுத்த பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்..

by Askar

“முழுமையான ஊரடங்கு நேரத்தில் பால் விநியோகம் குறித்த குழப்பமான அறிவிப்பால் பால் தட்டுப்பாடு ஏற்படும்:-தமிழக அரசு தெளிவுபடுத்த பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்..

“கொரனா” தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில் அதனை தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.00மணி முதல் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 3மாவட்டங்களில் நான்கு நாட்களும், சேலம், திருப்பூர் மாவட்டங்களில் மூன்று நாட்களும் “முழுமையான ஊரடங்கு”அமுல்படுத்தவிருப்பதாக தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

மேலும் உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை விட தனியார் நிறுவனங்களே அதிகளவில் பால் விநியோகம் செய்து வரும் சூழ்நிலையில் அந்த அறிவிப்பாணையில் தனியார் பால் நிறுவனங்களை புறக்கணித்து விட்டு ஆவின் மட்டும் என தனித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தினசரி பால் தேவையில் சுமார் 84%பாலினை தனியார் பால் நிறுவனங்களும், 16%மட்டும் ஆவின் நிறுவனமும் பூர்த்தி செய்து வரும் சூழ்நிலையில் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கும் மொத்த பாலினையும் பால் முகவர்களே பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்து வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்களின் பால் இல்லாமல் ஆவின் பாலினை மட்டும் விநியோகம் செய்வதோ அல்லது ஆவின் மூலம் பால் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து விடலாம் என்பதோ இயலாத காரியமாகும்.

இந்நிலையில் முழுமையான ஊரடங்கு நேரத்தில் ஆவின் மட்டுமே செயல்படும் என்கிற அடிப்படையில் அரசின் அறிவிப்பாணையில் தனித்து தெரிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி தனியார் பால் நிறுவனங்கள், பால் முகவர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை தனியார் பால் நிறுவனங்களின் பால் விநியோகத்தை தடை செய்து விட்டு, ஆவின் பாலை மட்டுமே விநியோகம் செய்திட வேண்டும் என்கிற உத்தரவு அமுல்படுத்தப்படுமானால் மேற்கண்ட மாவட்டங்களில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டு பச்சிளம் குழந்தைகளுக்கும், முதியவர்கள், நோயாளிகளுக்கும் பால் கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படுவதோடு, பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களையும் அது கடுமையாக பாதிக்கும்.

எனவே அந்த அறிவிப்பானையில் “ஆவின்” என்பதற்கு பதிலாக தனியார் மற்றும் ஆவின் பால் விநியோகத்தை “பால் விநியோகம்”என ஒருமித்த கருத்தினை ஏற்படுத்தும் வகையில் மாற்றம் செய்து அறிவிப்பாணை வெளியிட வேண்டுமாய் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனர் & மாநில தலைவர்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!