Home செய்திகள்கீழக்கரை செய்திகள் “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்பதற்கேற்ப வறியவர்களுக்கு உதவி செய்து வரும் காவல்துறை ஆய்வாளர்..

“இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்பதற்கேற்ப வறியவர்களுக்கு உதவி செய்து வரும் காவல்துறை ஆய்வாளர்..

by ஆசிரியர்

“இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்னும் வாக்கியத்திற்கு ஏற்ப சட்டம் ஒழுங்கு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தும் பணிகளுக்கு இடையே பேருந்து நிலையம் மற்று வீதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றோர், மன நலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தினந்தோறும் மூன்று வேளையும் உணவளித்து வரும் காவல் ஆய்வாளர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பாலமுருகன் என்பவர் காவல் நிலையத்திலேயே உணவு சமைத்து மூன்று வேலையும் பேருந்து நிலையம் மற்றும் வீதிகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் முதியோர்கள் நரிக்குறவர்கள் ஆகியோருக்கு மூன்று 3 வேளையும் உணவளித்து அவர்களின் பசிப்பிணியைப் போக்கி வருகிறார் அவரைப் பற்றிய விவரம் இதோ/-

பணியில் நேர்மை தவறாமலும் கடமை கண்ணியத்துடனும் காவல் பணியாற்றி வருபவர் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் இங்கு தன் பணியை தொடங்கியது முதல் தினந்தோறும் ஆதரவற்ற ஏழை எளியோருக்கு உதவி செய்யும் மனப்பான்மையோடு உதவி வந்த போதிலும் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது

144 தடை உத்தரவை அமல்படுத்த இரவு பகல் பாராது பணியாற்றி வந்த போதிலும் உணவகங்கள் 144 தடை உத்தரவால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன மேலும் பெரும்பாலான உணவகங்களும் மூடப்பட்டுள்ளதால் தினந்தோறும் பேருந்துகள் மற்றும் கடைகளில் பிச்சை எடுத்து அல்லது அவர்கள் தரும் உணவினை உண்டு வாழ்ந்து வந்தனர்

தெருவோரங்களில் மற்றும் பேருந்து நிலையங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோர் அருப்புக்கோட்டையில் 50க்கும் மேற்பட்டோர் சுற்றி திரிகின்றனர் மேலும் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கயிறு பாசி மணி போன்றவை விற்று தனது வயிற்று பசியை போக்கி வந்த நரிக்குறவர்கள் இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றனர் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள 144 தடை உத்தரவை இவர்கள் பசியால் வாடி வந்ததை அறிந்த நகர் காவல் ஆய்வாளர் தன் சக காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலேயே மூன்று வேளையும் சுடச்சுட உணவு சமைத்து மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற அவர்கள் அவர்களுடன் நரிக்குறவர் மக்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூன்று வேலையும் சுடச்சுட உணவு வழங்கி அவர்களுக்கு பசிப்பிணி போக்கி வருகிறார்.

தன் பணியாற்றும் காவல் எல்லைக்குள் யாரும் பசியோடு தூங்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் பசியால் வாடும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் நரிக்குறவர் மக்களுக்கு மூன்று வேளையும் உணவளித்து பசிப்பிணி போக்கி வரும் நகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!