அய்யனார் கோவில் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தனியார் கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் பகுதியில் ஆற்றில் தண்ணீர் வரும்போது சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் இந்த ஆற்றில் குளித்து மகிழ்வது வழக்கம். அதேபோல் அய்யனார் கோவிலுக்கும் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கெடா வெட்டி வழிபடுவதும் வழக்கமாக உள்ளது. இது போன்ற நிகழ்ச்சியில் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் துணிகளை கொண்டு வந்து விட்டுச் செல்வதால் இதை இப்பகுதியில் தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகள் உண்பதால் உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக ராஜபாளையம் ரோட்டரி கிளப் மற்றும் கல்லூரி என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து அப்பகுதியில் உள்ள பழைய துணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500 கிலோ வரை உள்ள பிளாஸ்டிக் மற்றும் பழைய துணிகளை அகற்றினர்..

செய்தியாளர் வி காளமேகம்