
மதுரை மாவட்டம் திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில், மேலக்கோட்டை என்ற இடத்தில் விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த காரும் , மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற சரக்கு வேனும், நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரை ஓட்டி வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சீனிவாஸ் (48) என்பவர் உடல் நசுங்கி பலியானார்.சரக்கு வேனில் வந்த மதுரையைச் சேர்ந்த ஜோதிராமன்(42) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .திருமங்கலம் தீயணைப்புத்துறையினர் , உயிரிழந்த சீனிவாஸ் – உடலை 30 நிமிடங்கள் போராடி மீட்டு , திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.( விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் டயர் வெடித்ததால், நிலைதடுமாறி தடுப்பு சுவற்றில் ஏறி குறுக்கே பாய்ந்து , சரக்கு வேனில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளன.இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலிசார் விசரனை.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.