இராஜபாளையம் பகுதியில் செல்போன் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் வீடுகளில் செல்போன் திருட்டு என பல்வேறு புகார்கள் இராஜபாளையம் உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு வந்தன.இதைத்தொடர்ந்து இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்இரவு ரோந்து பணியில் சார்பு ஆய்வாளர் சக்திகுமார் .சிறப்பு ஆய்வாளர் ரவி தலைமை காவலர்கள் .கோபால் .இளங்கோவன் காவலர்கள் மதன் .ரவி .ராஜ்குமார் ஆகிய போலீசார் ரோந்து பணியில் போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த குமார் மகன் அருண்குமார் வயது 20. இராஜபாளையம் சீனிவாசன் புதுத் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகன் சுந்தர்ராஜ் வயது 20 .ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் இவர்களுடன் அருப்புகோட்டை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அழகர் மகன் சந்துரு பாண்டியன் ஆகிய மூன்று பேர் சேர்ந்து விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் . அருப்பு கோட்டை .தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என பல பகுதிகளில் செல்போன் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தெரியவந்தது.(சென்னை ஆவடி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பள்ளியில் இருந்து தப்பித்து வந்தவன் சந்துருபாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது)மேலும் தீவிர விசாரணை செய்து இவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தில் ஒன்றை அருப்புக்கோட்டை காவல் நிலைத்தில் ஒப்படைத்துள்ளனர் மேலும் கோவில்பட்டி பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களும் அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.சென்னை ஆவடி சீர்திருத்தப்பள்ளியில் தப்பி வந்த சந்துருபாண்டியன் சென்னை ஆவடி காவலர்களிடம் ஒப்படைந்தனர் .அருண்குமார் சுந்தர்ராஜ் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த காவல் துறையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் பாராட்டினார்..

செய்தியாளர் வி காளமேகம்