Home நூல்கள்இஸ்லாம் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -37

( கி.பி 1299-1922)

அரபு உலகிலிருந்து தொடர்ந்து வந்த குறைகள் அழுத்தங்களால், அப்துல் வஹாப் அவர்களை பிடிக்க, உஸ்மானிய படை அனுப்பப்பட்டது.

இதனையறிந்த அப்துல் வஹாப் அவர்கள் வுயானாவிலிருந்து ரியாத் அருகிலுள்ள திரியா என்ற பகுதிக்கு சென்றுவிட்டார்.

திரியாவின் அன்றைய ஆட்சியாளர் இப்னு சவுத் அவர்களின் மகன் அப்துல் அஜீஸ் அவர்கள் அப்துல் வஹாப் அவர்களின் மாணவராக இருந்தார்.

ஆகவே ஒரே கொள்கைகளில் இருந்ததால் தங்களது நாட்டில்‌வந்து தங்கிக் கொள்ளுமாறு அப்துல் வஹாப் அவர்களை அப்துல் அஜீஸ் அவர்கள் அழைத்து தங்க வைத்தார்.

அப்போது இப்னு சவுத் அவர்களுக்கும் அப்துல் வஹாப் அவர்களுக்கும் கி .பி 1744 ஆம்ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதில் இப்னு சவுத் அவர்கள் அப்துல் வஹாப் அவர்களின் மார்க்கம் சம்பந்தமான செயல்களுக்கு ஆதரவு அளிப்பது என்றும்,

அப்துல் வஹாப் அவர்கள் இப்னு சவுத் அவர்களின் ஆட்சி சம்பந்தமான செயல்களில் ஆதரிப்பது என்பதும் ஒப்பந்தத்தின் முக்கிய செய்தியாகும்.

ஷிர்க் என்று மார்க்கத்தின் பல விசயங்களை கடுமையாக எதிர்த்த அப்துல் வஹாப் அவர்கள் கி.பி 1792 ஆம்ஆண்டு மரணமடைந்தார். அவரின் சிந்தனைகளே இன்று “வஹாபியிஸம்” என்று அழைக்கப்படுகிறது.

இப்னு சவுத் ராணுவத்திற்கும் உஸ்மானிய படைகளுக்கும் இடையே சண்டைகள் நடந்து கொண்டே இருந்தன.

சவுத் இராணுவத்தின் படைத்தலைவர் சிறை பிடிக்கப்பட்டு, அவருக்கு துருக்கியில் வைத்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

தோல்வியடைந்த மன்னர் சவுத் குடும்பத்தினர் 74 பேர் குவைத்தில் ஆட்சியில் இருந்த சபா குடும்பத்தினரிடம் தஞ்சம் அடைந்தனர்.

ஈராக் குவைத்தை ஆக்ரமித்த போது அதனுடைய சபா மன்னர் குடும்பத்திற்கு சவூதி அரேபியா அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது பழைய பிணைப்புகளின் காரணமே என்பதையும் நாம் அறிய வேண்டும்.

கி.பி 1921 ஆம் அப்துல் அஜீஸ் அவர்கள் சிறிய படையுடன் வந்து சண்டையிட்டு மக்கா மற்றும் மதினா நகரங்களை கைப்பற்றினார்.

அரபுலகத்தின் அந்த குறிப்பிட்ட பகுதிகளை பிடித்து தனது சவுத் குடும்பத்தை அடையாளப்படுத்தும் விதமாக “சவுதி அரேபியா” என்றும் பெயர் சூட்டினார்.

இதன் பிறகு சவுதியில் உள்ள கப்ருகள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டன.

1924 ஆம் ஆண்டு மதினாவின் பக்கி கபர்ஸ்தானில் இருந்த கப்ருகளின் அடையாளங்கள் கட்டிடங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப் பட்டன.

இன்றளவும் அப்துல் அஜீஸ் குடும்பத்தினர்களின் ஆட்சியில் சவுதி அரேபியா இருக்கிறது.

அப்துல் வஹாப் அவர்களுடன் ஏற்பட்ட பிணைப்பால் இன்று வரை வஹாபியிஸ கோட்பாடுகளை சவுதி அரசாங்கம் கடைபிடிக்கிறது.

மிக நீண்ட நாட்களாக மக்கா, மதினா இரண்டு புனிதத் தலங்களும் துருக்கியின் கட்டுப்பாட்டில் இருந்தன.

பிறகு சவுதி மன்னரின் குடும்ப ஆட்சியின் கீழ் இன்றைய புனிதத் தலங்கள் வந்தன.

இதற்கான இமாம்கள் நியமனம், பாதுகாப்பு, நிர்வாகம், செலவுகள் அனைத்தும் சவுதி அரசாங்கமே செய்கிறது.

அரேபிய பகுதிகளில் இருந்து வெளியேறிய உஸ்மானிய பேரரசு பிறகான பல காரணங்களால் வீழ்ச்சியை நோக்கி பயணித்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!