Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -36

(கி.பி 1299-1922)

உஸ்மானிய கிலாபத் முழு முஸ்லீம்உலகிற்கே தலைமைத்துவமாக கருதப்பட்டது.

உஸ்மானிய மன்னர்களின் ஆட்சிகளும் மிகச்சிறப்பாகவே இருந்தது.

இஸ்லாமிய கோட்பாடுகளோடு மனிதநேயமிக்க சமய நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சம நீதி, என எல்லா மத மக்களையும் ஒன்றாகவே கருதும் மகத்தான ஆட்சிகளாக இருந்தன.

அன்றைய உலகின் மிகப்பெரிய பேரரசாகவும் ராணுவம், உருவாக்கம், பல அறிவியல் கண்டுபிடிப்புகள் என எல்லாவற்றிலும் முன்னோடியாக திகழ்ந்தது.

உச்சகட்ட நிலைக்குப்பிறகு உஸ்மானிய பேரரசு சரிவுகளை, வீழ்ச்சிகளை சந்திக்க ஆரம்பித்தது.

சூஃபியிஸ கருத்துக்கள் மிகைத்தது. பல கொள்கை குழப்பங்கள் உருவானது.

இதனால் உஸ்மானிய பேரரசில் அரசியல் பிளவுகள் ஏற்பட்டது. மிகப்பெரிய பகுதியான எகிப்து உஸ்மானிய கிலாபத்திலிருந்து விலகியது.

உஸ்மானிய பேரரசு பலம் குன்ற ஆரம்பித்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் உஸ்மானிய பேரரசின் பகுதிகளை ஆக்ரமிக்கத் துவங்கின.

துருக்கி வலுவிழந்து பொருளாதார பற்றாக்குறையால் தடுமாறியது.

இதற்கான காரணங்களை இன்றைய முஸ்லீம்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

இஸ்லாமிய கொள்கைகளை வைத்தே முஸ்லீம்கள் தங்களுக்கிடையே சண்டைகள் போட்டுக்கொண்டு பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

கி.பி 1700 ஆண்டுகளில் ஏற்பட்ட கொள்கை குழப்பங்களால் முஸ்லீம் மக்களிடையே நிறைய கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

சவுதி அரேபியாவின் வுயானா என்ற பகுதியில் கி.பி 1703 ஆம் ஆண்டு அப்துல் வஹாப் பிறந்தார்.

இவர் மதினாவில் உயர்கல்வி பயின்றார். இவருக்கு இந்திய உஸ்தாத் ஒருவரே ஆசிரியராகவும் இருந்தார்.

அதே கி.பி 1703 ஆம்ஆண்டு மிகப்பெரிய மார்க்க புரட்சியாளர் என்று கூறப்படும் ஷாவலியுல்லாஹ் அவர்கள் இந்தியாவில் பிறந்தார்கள்.

இவர் இந்தியாவில் இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய மார்க்க புரட்சியாளராக கருதப்படுகிறார்.

அப்துல் வஹாப் அவர்களும், ஷாவலியுல்லாஹ் அவர்களும் மதினாவில் ஒன்றாக படித்ததாகக் கூறப்படுகிறது.

ஷா வலியுல்லாஹ் அவர்கள் இந்தியாவில் தங்கள் மார்க்க பணிகளை சிறப்பாக செய்தார்கள்.

அப்துல்வஹாப் அவர்கள் ஜியாரத் மற்றும் அன்றைய இஸ்லாமிய உலகின் சில பழக்கவழக்கங்களை கூடாது என்றும் அது இறைவனுக்கு இணை வைத்தல் என்றும் கூறினார்.

இதனால் பலகப்ருகளின் மேல் கட்டப்பட்டிருந்த அடையாளங்கள் இடிக்கப்பட்டன. தர்ஹா வழிபாடுகள் போன்றவற்றை கடுமையாக அப்துல்வஹாப் எதிர்த்தார்.

இதனால் அரபுலகில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அரேபிய மக்கள் இதனை உஸ்மானிய கலீபாவிற்கு தெரியப்படுத்தினர். இது உஸ்மானிய பேரரசுக்கு பெரும் பிரச்சனையாக மாறியது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!