Home நூல்கள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

பகுதி -3

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -39

( கி.பி.1299-1922)

“யெனிச்சாரி”
என்றால் துருக்கியில் புதிய சிப்பாய்கள் என்ற பொருள் படுகிற படைப்பிரிவு முதலாவது முராத் காலத்தில் மன்னர்களின் மெய்க்காவல் படையாக உருவாக்கப்பட்டது.

இந்த படைப்பிரிவு பொதுவாக கிறிஸ்தவத்
திலிருந்து
முஸ்லீம்களாக மாறிய வீரர்களுக்கு
ஆன்மீக மற்றும் பலவகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இது முதலாம் முராத் அவர்களால் உருவாக்கப்பட்டது.

இவர்களுக்கு பலவகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.
இவர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது.
மிகவும் ஒழுக்கமான அர்ப்பணிப்புள்ள வீரர்களாக திகழ்ந்தனர்.

உஸ்மானிய பேரரசின் இந்தப்படைப்பிரிவு
உருவாக்கப்பட்ட 200
ஆண்டுகளில் உஸ்மானிய பேரரசின் வெற்றிக்கு முழு காரணமாக இருந்தது.

இந்தப் பிரிவில்,
பிந்தைய காலங்களில்
முஸ்லீம் வீரர்களும் சேர்க்கப்பட்டனர்.
1574 ஆம்ஆண்டு 20,000 வீரர்களுடன் இருந்த இது 1826 ஆம் ஆண்டில் 1,35,000 வீரர்களாக உயர்ந்தது.

நாளடைவில் இவர்கள் கட்டுக்கோப்புகள் தளர்ந்து பேரரசிற்கே அபாயமாக மாறினர்.
இதனால் இரண்டாவது முஹம்மது இந்தபடைப்பிரிவை
முழுவதும் கலைத்தார்.

இதுபோன்ற விசுவாசமான படைப்பிரிவு திசைமாறியதால் கலைக்கப்பட்டது
உஸ்மானிய ராணுவத்திற்கு பேரிழப்பாகும்.

கி.பி 1299 ஆம்ஆண்டு சிறிய நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட உஸ்மானிய அரசு
முதலில் புருஷா என்ற நகரை தலைநகராகக் கொண்டும் பிறகு காண்ஸ்டாண்டிநோபிள்
(இஸ்தான்புல்)நகரை
தலைநகராகக் கொண்டும்
1922 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய
600 ஆண்டுகளுக்கு
மேலாக ஆட்சி செய்து,

15மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் உலகின் பெரும் வல்லரசாகவும், இஸ்லாமியர்களின்
தலைமை பீடமாகவும்(கிலாபத்)
விளங்கியது.

36 மன்னர்கள் ஆட்சி செய்த உஸ்மானிய பேரரசு வலுவாகவும்,
இறுதி நூற்றாண்டுகளில்
வலுகுன்றியும் இருந்தது.
இறுதியில் முஸ்லீம்களாலேயே
இப்பேரரசு சிதைக்கப்பட்டது.

ஐரோப்பாவின் எழுச்சியும்,
முஸ்லீம்களிடையே
ஏற்பட்ட கொள்கை குழப்பங்களும்,
பிளவுகளும்,
வழக்கமான அரண்மனை, சொகுசு வாழ்க்கை,குடும்ப சண்டைகள்,
நிர்வாக சீர்கேடுகள் என வலு குன்றிய உஸ்மானிய பேரரசை
ஐரோப்பியர்களின்
சூழ்ச்சிகள் அழித்தது.

1839 களில் உருவாக்கப்பட்ட‌ Tanzimat (டான்ஸிமாட்)
என்ற சிந்தனைகள்
நவீன மயமாக்கல் என்ற கருத்தியலில் உருவாக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் படித்துவிட்டு அங்கு மூளை சலவை செய்யப்பட்டு வந்த முஸ்லீம்கள்,

ஐரோப்பாவின் எழுச்சி மற்றும் சூழ்ச்சிகளால் வலுகுன்றி இருந்த துருக்கியில் புதிய
பிரிட்டிஷ் மற்றும்
பிரான்ஸ் நாட்டின்
கல்வி மற்றும் சிவில் சட்டங்களை அமல் படுத்த வேண்டும் என்றும், ஷரியத் சட்டங்கள் பயனளிக்காது எனவும் பரிந்துரை செய்தனர்.

ஐரோப்பாவில் படித்து விட்டு வந்த பல “பாஷாக்கள்” இதனையே வலியுறுத்தினர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளை தனியார்
மயப்படுத்துவது,
பிரிட்டிஷ் மற்றும் பிரான்சின் கல்வி திட்டங்கள்,
இராணுவ உடைகளை மாற்றுவது,
புதிய பார்லிமென்ட்
சிஸ்டம், எல்லா மதமக்களையும்
இராணுவத்தில் அவசியம் இணைப்பது,

வட்டி அடிப்படையிலான வங்கிகள், பங்குவர்த்தகம்,
வட்டிப்பொருளாதாரம்
மற்றும் தாராளமான ஓரினச்சேர்க்கை,
பிரான்ஸ் நாட்டின் சிவில் சட்டம்,
இவைகளை துருக்கியில் அமல்படுத்தினால்
நவீன ஆயுதங்கள்
மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவோம் என ஐரோப்பா வலியுறுத்தியது.

மேலும் அன்றைய முக்கிய தேவைகளான ரயில்வே,தபால் நிலைய உருவாக்கங்கள்,
இன்ஜின்கள் ஆகியவற்றை ஐரோப்பா துருக்கிக்கு வழங்க
பல நிபந்தனைகளை
விதித்தது.

ரஷ்யாவுடன் துருக்கியின் போர்,
அரபுலகில் அப்துல் அஜீஸ் படைகளோடு போர் என ராணுவ தளவாடங்களுக்காக
துருக்கி இவற்றை நடைமுறை படுத்த ஒப்புக்கொண்டது.

துருக்கியில் அப்போது இளம் துருக்கியர்கள் என்ற
நவீனத்துவத்தை தூக்கிப்பிடித்து தேசியவாதம் (Nationalism) பேசுகிற
அணி உருவானது.

இதில் ராணுவத்தில்
பணிபுரிந்த முஸ்தபா கமால் பாட்சா இந்த அணியை முன்னெடுக்க இஸ்லாமிய கிலாபத்
தனது இறுதி காலத்தை அடைந்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!