இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
என்ற வரலாற்று புதினத் தொடர் 1300 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சிகளை,
வரலாற்றை,
கலாச்சாரத்தை
பேசும் தொடர்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

பகுதி-1

கப்ளிசேட்!

உமையாக்களின் பேரரசு-1
(கி.பி.661-750)

மத்திய தரைக்கடல்
அலைகளின் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதியாக இருந்தது.அன்று வானத்தில் நிலா வளரத் தொடங்கியிருந்தது.
நட்சத்திரங்களின் கண்சிமிட்டலில் வானம் வசீகரமாக மின்னியது.
கப்பல்களின் வெளிச்சங்களால்
அந்தப்பகுதி ஒளிக்கோளமாக காட்சி அளித்தது.

உமைய்யா முஸ்லீம் ஆட்சியாளர்களால்
உலகில் ஏராளமான நன்மைகள் ஏற்படப்போவதை அது முன்னறிவிப்பதாக இருந்தது.

மத்திய தரைக்கடலில்
முஸ்லீம்களின் கடற்படை பிரமாண்டமான கப்பல்களுடன்
அணிவகுத்து
சென்றது.

நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து சென்றன.
பலவகையான கப்பல்கள் முஸ்லீம்களின் கடற்படை வலிமையை பறைசாற்றுகிறது.

கப்பல்படைகளின் மையப்பகுதியில் அந்த பிரமாண்டமான இரண்டடுக்கு கப்பல் விர்ரென நீரை கிழித்துக்கொண்டு மிதந்து சென்றது.

கப்பலின் உச்சியில்
முஸ்லீம் ஆட்சியாளர்களான
உமைய்யாக்களின் கொடி காற்றில் படபடத்து பறந்தது.

கப்பலின் முதல் தளத்தில் முன்வலது பகுதியில் இருந்த
அந்த பெரிய அறையில் இரவுத்தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

முஆவியா (ரலி) அவர்களின் நம்பிக்கைக்குரிய
தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்கள் இமாமாக தனது படைத்
தலைவர்களுக்கு
தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்.

நூறு கப்பல்களின் தளபதிகளும் உபதளபதிகளும் தளபதியின்‌ கப்பலுக்கு வருகைதந்து இருந்தனர்.

ஆப்பிரிக்க,
ஐரோப்பிய நாடுகளை வெற்றிகொண்டு இறுதியாக அட்லாண்டிக் கடல் வரை சென்று இஸ்லாமியர்களின்
கொடியை ஏற்றவேண்டும் என்று
மிகுந்த திட்டமிடலோடு
பயணிக்கிறது
அந்தப் படை.

அன்று இரவு ஆலோசனைகள் நடைபெறப்போகிறது.
அதில் முக்கிய போர் திட்டங்களை
வியூகங்களை கலந்துபேசி இறுதியில் தளபதி உக்பா அவர்களின் முடிவுப்படி திட்டங்கள்
செயல்படுத்தப்படும்.

இறைச்சியின் மணங்கள் காற்றில் மிதந்து வருகிறது.
இருப்பினும் எளிமையான உணவுகள்.
இறைச்சி மட்டுமே அந்த உணவில் ஆடம்பரம்.

முதல் தளத்தின் வெளிப்பகுதியில்
விரிக்கப்பட்டிருந்த
சாதாரண விரிப்புகளில்
தளபதிகளும் உபதளபதிகளும் அமர்ந்து கொண்டனர்.

தொழுகை முடித்து இறுதியாக வந்த தளபதி உக்பத் இப்னு நாபீ என்ற உக்பா அவர்கள் தளபதிகளுக்கு தங்கள் கைகளாலேயே பரிமாறினார்கள்.

இறுதியாக முழங்காலிட்டு இஸ்லாமிய மரபுப்படி அமர்ந்து உணவை அருந்தி முடித்து இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு,

ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் கூடத்திற்குள் நுழைந்தார்.

ஆலோசனை கூடத்தில் ஜன்னல்கள் வழியாக தூரத்தில் சிறிதாக தெரிந்த வெளிச்சப் புள்ளிகள் சிறிது நேரத்தில் வெளிச்சம்
பெரிதாக..அது ஒரு கப்பல் படை அணிவகுப்பு என்று புரிந்து போனது..

திடீரென நெருப்புபொறிகள்
முஸ்லீம்களின் கப்பல்களை நோக்கி பறந்து வந்தன.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com