Home நூல்கள்இஸ்லாம் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by syed abdulla

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமையாக்களின் பேரரசு -2 (கி.பி.661-750)

உமையாக்களின் தலைநகரான சிரியாவின் டமாஸ்கஸ் அருகே வரை ரோமப்பேரரசு விரிந்து பரந்து இருந்தது.

ஆயிரம் வருடங்கள் பாரம்பரியமும், ஆடம்பரங்களும், சர்வாதிகாரமும், நிறைந்து வழிந்த ரோமப்பேரரசு. கிறிஸ்தவ மன்னர்களின் ஆட்சியில் மக்களே அவர்களின் ஆட்சியை வெறுத்த காலம்.

ரோமப்பேரரசில் வாழ்ந்த கிறிஸ்தவமக்கள் கூட இஸ்லாமிய பேரரசின் எல்லைகளுக்குள் வந்து வாழ ஆசைப்பட்ட காலம்.

ரோம சக்கரவர்த்திகளின் ஆடம்பரங்கள். பாதிரிமார்களின் அழிச்சாட்டியங்கள் அதிகாரிகளின் லஞ்ச ஊழல்கள் என ரோமப்பேரரசே மக்கள் விரோத செயல்பாடுகளால் அந்த நாட்டு மக்களாலேயே வெறுக்கப்பட்டது.

இஸ்லாமியர்களின் சிறிய படைகள் ரோமானியர்களின் பெரும் படைகளை எளிதாக தோற்கடிக்க முடிந்தது.

தங்களின் பேராசைகளால் ஒரே போரில் எண்பதாயிரம் வீரர்களை இழந்தது ரோமாபுரி பேரரசு.

அந்தப் போரில் சில இஸ்லாமிய வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு ரோம சக்கரவர்த்தியின் அவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சக்கரவர்த்தியை துணிவோடு சந்தித்த இஸ்லாமிய வீரர்களில் ஒரு குரைசி நபித்தோழர் ரோமசக்கரவர்த்திக்கு இஸ்லாமிய அழைப்பை விடுத்தார்.

இதை பொறுக்காத ரோமப்பேரரசின் அமைச்சர் ஒருவர் எழுந்து வந்து அந்த தோழரின் கன்னத்தில் பளாரென அறைந்தார். தோழர் நிலைகுலைந்து போனார்.மிகவும் அவமானமாகவும் உணர்ந்தார்.

இந்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க ஏராளமான இழப்பீட்டு தொகையை ரோமச்சக்கரவர்த்தி கோரினார்.

இதனை ஒப்புக்கொண்ட இஸ்லாமிய கலீபா முஆவியா (ரலி) அவர்கள் இழப்பீட்டு தொகையை வழங்கி கைதிகளை மீட்க செய்தார்கள்.

குரைசி நபித்தோழர் தனக்கு நேர்ந்த அவமானத்தை கலீபாவிடம் முறையிட்டார்.

கலீபா அவர்கள் தனது தோழருக்கு நடந்த அவமானத்தை மறக்கவில்லை.

ஒரு கப்பல் வியாபாரியை அழைத்து, அவரிடம் ரோமச் சக்கரவர்த்திக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் நிறைய பரிசு பொருள்களை கொடுத்தனுப்பி,

அடித்த அந்த அமைச்சருக்கு மட்டும் கொடுக்காமல் அடுத்த முறை தருகிறேன் என்று கூறிவிட்டு அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வந்துவிடுமாறு ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

ரோமச் சக்ரவர்த்திக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் பரிசுப் பொருட்களை கொடுத்துவிட்டு அடித்த அமைச்சருக்கு மட்டும் உயர்ந்த பரிசுப் பொருளை தங்களுக்கு கொடுக்க கலீபா விரும்புகிறார்.

தங்களுக்கு என்ன வேண்டும் என்று அடித்தஅமைச்சரிடம் கேட்க, அவர் பலவண்ணங்களில் ஒரு விரிப்புகேட்க அதனை சிறப்பாக தயார் செய்து அடுத்தமுறை அந்த வியாபாரியிடமே கப்பலில் அனுப்பி வைத்தார் கலீபா முஆவியா (ரலி) அவர்கள்.

கப்பல் கரையை அடைந்ததும் ஆர்வம் தாங்காமல் கப்பலுக்கே அடித்த அந்தஅமைச்சர் வந்தார்.

அந்த அமைச்சர் கப்பலுக்கு வந்தவுடன் திடீரென கப்பலின் நங்கூரங்கள் எடுக்கப்பட்டு கப்பல் வேகமாக ஓடத்தொடங்கியது. அமைச்சர் அதிர்ந்து போனார்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்.!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!