Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை ! தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை ! !

ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை ! தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை ! !

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வன்முறை மற்றும் காயம் சம்பந்தப்பட்ட வழக்குகள் கடந்த 2022-ம் ஆண்டு 840 வழக்குகளும், 2023-ம் ஆண்டு 784 வழக்குகளும் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 7 சதவிகிதம் குறைவாகும். கொலை வழக்குகள் கடந்த 2022-ம் வருடம் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2023-ம் வருடம் 37 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 4 கொலை வழக்குகள் அதிகரிக்கப்பட்டிருந்தாலும், இந்த 4 வழக்குகளும் குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட வழக்குகள் ஆகும். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் பழிக்கு பழி கொலை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.சொத்து குற்ற வழக்குகள் கடந்த ஆண்டு 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 323 வழக்குகளில் சொத்துக்கள் மீட்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 222 வழக்குகளில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 10 சதவிகிதம் அதிகமாகும். மேலும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் பதிவான வழக்குகள் 48 சதவிகிதம் குறைவாகும். கொடுங்குற்ற வழக்கு (Grave Crime) கடந்த 2022-ம் ஆண்டு 56 வழக்குகளும், 2023-ம் ஆண்டு 36 வழக்குகளும் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35 விழுக்காடுகள் குறைவாகும்.2023-ம் ஆண்டு 84 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக மாவட்ட காவல்துறை கல்வித்துறையுடன் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.நடப்பு வருடம் பதிவு செய்யப்பட்ட 1294 வாகன விபத்து வழக்குகளில் 410 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 1231 நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், விதிமீறிலில் ஈடுபட்ட 2,27,685 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன விபத்து வழக்குகள் கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக உள்ளதால், இவற்றை தடுக்கும் பொருட்டு மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்படவும், வாகன விபத்துகள் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தவும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக தீவிர சோதனை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும்விற்பனை செய்த 359 நபர்கள் மீது 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.13,16,588/- மதிப்புள்ள 1617 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4290 நபர்கள் மீது 4290 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9595 லிட்டர் மதுபானம் மற்றும் பனங்கள் 2829 லிட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 123 நபர்கள் மீது 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 39,25,630/- மதிப்புள்ள 391 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 119 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 197 நபர்கள் மீது 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சம்பந்தமாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் தொடர்புடைய 51 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சூதாட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக இவ்வாண்டில் மொத்தம் 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் தொடர்புடைய 426 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தவருடம் 01.01.2023-ம் தேதி முதல் இந்நாள் வரை சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபட்ட 13 நபர்களும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1 நபர்கள், பாலியல் குற்ற செயல்களில் ஈடுபட்ட 1 நபர்கள், சொத்து குற்றசெயல்களில் ஈடுபட்ட 1 நபர்கள் என மொத்தம் 16 நபர்கள் மீதுகுண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. இந்த வருடம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடப்பாண்டில் 33 சைபர் குற்றவழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அவற்றில் தொடர்புடைய 4 வழக்குகளில் 5 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2023-ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இது வரை ரூ.2,30,55,514/- பணம் இழக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.4,63,80,141.88/- முடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மட்டுமின்றி இந்த மேற்கண்ட 3 வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.20,47,115/- திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 870 புகார் மனுக்கள் National Cyber Crime Portal (NCRP) மூலமாகவும் பெறப்பட்டு இதில் 545 மனு ரசீதுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.45,45,159/- முடக்கம் செய்யபட்டு ரூ. 12,19,833/- பணம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அலைபேசி காணாமல் போனதாக பெறப்பட்ட 891 புகார்களில் 578 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டு புகார்தாரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கிவைப்பவர்கள், சில்லறை மதுபானம் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 8300031100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், அவ்வாறு தகவல் தெரிவிக்கப்படுபவர்கள் பற்றிய இரகசியம் பாதுகாக்கப்படுமெனவும், மேற்படி தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.தங்கதுரை எச்சரித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!