Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு ! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு !!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு ! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு !!

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் (CNC) Operator-Turning Vertical Centre) NTTF நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்கவேண்டும். பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் இப் பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாட்கள் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப் பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (SSC) and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்டு தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15000/- முதல் ரூ.20000/- வரை பெறலாம். மேலும் புகழ்பெற்ற தனியார் தொழில்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப் பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!