Home செய்திகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளருக்கு பசுமை சாம்பியன் விருது !

சுற்றுச்சூழல் பாதுகாப்பாளருக்கு பசுமை சாம்பியன் விருது !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறவனங்களுக்கு “பசுமை சாம்பியன் விருது” சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த நிதியிலிருந்து வழங்கப்படும். 2021- 2022 முதல் ரூ.1/- கோடி செலவில் விருது பெறுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள் /அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பரிசு வழங்கப்படும்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) இந்த அறிவிப்பின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்க முன்மொழிந்துள்ள கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள் / கல்வி நிறுவனங்கள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனி நபர்கள் /உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.1.சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, 2.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, 3.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, 4.பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், 5.நிலைத்தகு வளர்ச்சி, 6.திடக்கழிவு மேலாண்மை, 7.நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, 8.காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, 9.காற்று மாசு குறைத்தல், 10.பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, 11.சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, 12.கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, 13.பிற பிளாஸ்டிக் கழிவு தொடர்பான திட்டங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்பபடிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் கடைசி நாள் ஆகும். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இராமநாதபுரம் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!