Home செய்திகள் உச்சிப்புள்ளி அருகே விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

உச்சிப்புள்ளி அருகே விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி அ. ஆஷிகா, சாலை வலசை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயறு வளர்ச்சி ஊக்கிகளை கொண்டுள்ள ஊட்டச்சத்துக்களின் பயன்பாட்டு முறையை பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பயிர் வளர்ச்சி ஊக்கள் ஏழு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஆக்சின், சைட்டோகைனின், ஜிப்ரலின், அப்சிசிக் அமிலம், பாலிஅமைன்கள், ஆன்டிக்மைட்டாடிக் மற்றும் ஆன்ட்டிஜிபர்லின் ஆகியவை ஆகும். ஆக்சின் (Axin) தாவரங்களில் வேர் மற்றும் தண்டு வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், செல் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுகிறது. சைட்டோகைனின் (Cytokine)ஆக்சினை போன்றே இந்த வகை ரசாயனங்களும் தண்டு மற்றும் வேர் தூண்டுவதற்கு பயன்படுகிறன்றன.ஜிப்ரலின் (Gibralin) இவை விதைகளில் காணப்படும் மந்தத்தன்மையை உறக்க நிலையிலேயே உடைத்து, நன்றாக முளைக்கும் திறனை விதைக்கு ஏற்படுத்துகின்றது. அப்சிசிக் அமிலம் (Aphthous acid) பூண்டு மற்றும் வெங்காயத்தில் குமிழ் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு மட்டுமல்லாமல், கிழங்குகளின் வளர்ச்சியைத் துண்டுவதற்கும் இவை பயன்படுகிறது. பாலிகமைன்கள் (Polygamines) இவை வேர் மற்றும் தண்டின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு வித்திடுவது மட்டுமல்லாமல் விதைகளின் கரு வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் பயன்படுகின்றன. ஆன்ட்டிமைட்டாடிக் (Antimycotic) இவைகள் குமிழ் மற்றும் தண்டின் வளர்ச்சியைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது. ஆன்ட்டிஜிபர்லின் (Antigiberlin)இவை ஜிப்ரலின்க்கு எதிர்ப்பாக செயல்படும் ரசாயனம் ஆகும். குமிழ் மற்றும் கிழங்கு வளர்ச்சியைத் தூண்டி வலுப்படுத்துகின்றது. என்று விவசாயிகளுக்கு மாணவி அ. ஆஷிகா விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இதன் மூலம் பயிறு வகைகள் 20 சதவிகிதம் வரை மகசூல் அதிகரித்து பயறுகளில் பூ உதிர்வதை கட்டுப்படுத்தும் என்றார். இதில் சுற்றி உள்ள கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com