Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நட்புக்கும்… மனித நேய பணிக்கும்… ஜாதியுமில்லை.. மதமும் இல்லை.. வருடங்கள் கடந்தாலும் நட்பால் மனித நேய பணியில் ஒன்றிணைந்த ஹைரத்துல் ஜலாலியா மாணவர்கள்…

நட்புக்கும்… மனித நேய பணிக்கும்… ஜாதியுமில்லை.. மதமும் இல்லை.. வருடங்கள் கடந்தாலும் நட்பால் மனித நேய பணியில் ஒன்றிணைந்த ஹைரத்துல் ஜலாலியா மாணவர்கள்…

by ஆசிரியர்

கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கும் வேலையில், மனிதனுக்கு வாழ்கையின் முக்கியத்துவத்தையும், இயற்கையின் விசாலத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

அதே போல் வேகமான உலகில் அவசர கதியில் ஓடி கொண்டிருந்த மனிதர்களை, ஒரு இடத்தில் நிற்க வைத்து சிந்திக்க வைத்தது மட்டும் அல்லாமல், நாம் விட்டு விலகி தூரமாக போயிருந்த சொந்தங்களையும், நட்புக்களையும் புதுப்பித்து கொள்ள ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

இதற்கு ஒரு அழகிய உதாரணம்தான் 1996 ஆம் ஆண்டு கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளியில் படித்த மாணவர்கள் வாட்சப் மூலம் இணைந்து இந்த அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து பழைய பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து, உலகில் பலதரப்பட்ட இடத்தில் உள்ள நண்பர்கள் 20 வருடங்களுக்கு பிறகு ஒன்றிணைந்து ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர்்

இது தொடர்பாக இந்த குழுவைச் சார்ந்த  சந்திரமோகன் கூறுகையில், “20 ஆண்டுகளுக்கு மேலாக பார்க்க முடியாத நண்பர்களை இந்த தருணத்தில் வாட்சப் எங்களை இணைத்தது. இந்த சூழ்நிலையில் நம்மால் முடிந்த உதவியினை செய்யவேண்டும் என்று சில நண்பர்களிடம் கூறினேன். அதற்க்கு அனைத்து நண்பர்களும் சம்மதம் தெரிவிக்க, பழைய நண்பர்களை ஒன்றிணைக்க முடிவு செய்தோம். அதே போல ஒன்றிணைத்தோம்.  இயன்ற உதவியினை பழைய பள்ளி மாணவர்கள் சார்பில் செய்யவேண்டும் என்று முடிவு செய்து ஏழை எளிய மக்களுக்கு எங்களால் முடிந்த உதவி ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி வழங்க முடிவு செய்து களத்தில் இறங்கினோம். அதுவே பல டன் அளவு கூடிய பொருட்களை மக்களுக்கு திரட்டி வழங்க முடிந்தது.

மேலும்எங்களுடைய நட்பு மதங்களை கடந்து மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக உணர்கிறேன்“ என்று பெருமிதத்துடனும்,  நெகிழ்ச்சியோடு கூறினார் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!