Home செய்திகள் ஊரடங்கு காலத்திலும் 593 அவசர வழக்குகளை ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், அவற்றில் 215 வழக்குகளில் தீர்ப்பு!

ஊரடங்கு காலத்திலும் 593 அவசர வழக்குகளை ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், அவற்றில் 215 வழக்குகளில் தீர்ப்பு!

by Askar

ஊரடங்கு காலத்திலும் 593 அவசர வழக்குகளை ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், அவற்றில் 215 வழக்குகளில் தீர்ப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன.

ஆனால் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டுகளில் அவசர வழக்குகளில் மட்டும் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்தப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டில், வழக்கமான நாட்களில் 16 அமர்வுகள் இடம்பெறும் நிலையில், தற்போது 2 அல்லது 3 அமர்வுகள் மட்டுமே நடக்கின்றன.

வீட்டில் இருந்தபடி நீதிபதிகள் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்த, வக்கீல்களும் ‘வீடியோ கான்பரன்சிங்’கில் தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

அதன்படி மார்ச் 23 முதல் ஏப்.,24 வரையிலான 17 நாட்களில், 593 வழக்குகள், 87 அமர்வுகளில் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவற்றில் 215 வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!