Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைக்கும் மதுரை கெமிஸ்ட் & டிரக்கிஸ்ட் அசோசியேஷன் அறிவிப்பு..

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைக்கும் மதுரை கெமிஸ்ட் & டிரக்கிஸ்ட் அசோசியேஷன் அறிவிப்பு..

by ஆசிரியர்

மதுரை காமராஜர் சாலையில்  மதுரை கெமிஸ்ட் & டிரக்கிஸ்ட் அசோசியேஷன் சார்பில் அதன் செயலாளர் சரவணன், தலைவர் கணேசன் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 33 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழக அரசானது மருந்து கடையை திறக்க அனுமதி கொடுத்திருந்தது. அதே போன்று 100% முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட இந்த நான்கு நாட்களிலும் மருந்து கடைகள் செயல்பட அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு எங்க சங்கம் சார்பில் நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம்.

மாவட்ட நிர்வாகமும், மருந்து கட்டுப்பாட்டு துறையும் மக்களுக்கு இந்த சேவையை செய்ய அறிவுறுத்தியதின் பேரில் மதுரை மாவட்டத்தில் 1,850 சில்லரை மருந்து கடைகளும், 250 மொத்த மருந்து கடைகளும் இந்த சேவையை செய்ய முழு மூச்சில் செயல்படும் என பொதுமக்களுக்கும் மருந்து வணிகர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் செயல்படும் என சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

மேலும் இந்த ஊரடங்கின் போது மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கும், கடை ஊழியர்களுக்கும் காவல்துறையால் இருந்த பிரச்சனை தொடர்பாக சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அதை பரிசீலனை செய்து தங்களுடைய சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட ஐடி கார்டை கட்டினாலே போதும் காவல்துறையினர் நிறுத்த மாட்டார்கள் என உறுதி கொடுத்து எங்கள் மனுவை பரிசீலனை செய்த காவல்துறை ஆணையர் மற்றும் கண்காணிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்து  கொள்கிறோம் என்றார்.

எந்த மருந்தும் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்கும் அதற்காக சங்கம் முழு முயற்சி எடுத்துள்ளது என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!