Home செய்திகள் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு .

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு .

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் மற்றும் திருவாடனை சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட, வாக்குச்சாவடி மையங்களில் இன்று (9.9.2018) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்;படி 01.01.2019-ம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்புசுருக்கத் திருத்தம்-2019 மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 01.09.2018 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் 5,56,614 ஆண் வாக்காளர்களும், 5,57,369 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 11,14,048 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயர் பதிவுசெய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள ஏதுவாக மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பெயர் பட்டியல் பொதுமக்களுக்கு வாசித்து காண்பிக்கப்படுகிறது. மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருத்தல், புதிய இளம் வாக்காளர்களை சேர்த்தல், பெயர் திருத்தம், நீக்கம், இடமாற்றம் ஆகியவை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றைய தினம் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன்படி, இன்றைய தினம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இராமநாதபுரம் நகராட்சி, மூலகொத்தளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீட்டு உரிமையாளர்கள் சங்க மெட்ரிக் பள்ளி மற்றும் திருவாடனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அச்சுந்தன்வயல் ஊராட்சி, கண்ணன் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: 18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் தகுதியான வாக்காளர்களாக வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்தல் அவசியம். மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தெகுதிகளுக்குட்பட்ட 1,367 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றைய தினம் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து படிவம்-6,7,8 மற்றும் 8A போன்ற படிவங்கள் பெறப்படுகின்றன. இதுதவிர 23.09.2018, 07.10.2018, 14.10.2018 ஆகிய தினங்களிலும்; அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!