இராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தை மற்றும் சார்பு கட்சிகள் நடத்திய சமத்துவப் பெரியார் கலைஞருக்கு புகழாஞ்சலி..

இன்று (09/09/2018) இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் புலிகள் ஒருங்கிணைத்த தமிழ்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்முருகன்  தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ரமேசு முன்னிலையிலும் அனைத்து கட்சிகள் பங்குபெற்ற சமத்துவப் பெரியார் கலைஞரின் புகழாஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பேரறிவாளன் கலந்துக்கொண்டு பேருரை நிகழ்த்தினார்.  அதைத் தொடர்ந்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக், மாவட்ட செய்தித் தொடர்பாளர்  சத்தியராசு வளவன், சமூக ஊடக மையத்தின் மாவட்ட அமைப்பாளர்  ஜானகி ராமன், இராமநாதபுரம் தொகுதிச் செயலாளர் அற்புதக்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் புகழாஞ்சலி உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் திமுக Ex. MP திருமதி. பவானி ராஜேந்திரன், தமாகா முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர்  ரவிச்சந்திரன் ராமவன்னி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்  முருக பூபதி, தமமுக மாவட்ட செயலாளர்  ரரகுமான், பெரியார் பேரவை  நாகேசுவரன் , திக மாவட்ட செயலாளர் ரவி மற்றும் SDPI மாவட்ட தலைவர் அப்துல் வகாப், திமுக நகர் செயலாளர் தகார்மேகம் போன்றோர்கள் கலந்துக் கொண்டு புகழாஞ்சலி உரை நிகழ்த்தினார்கள்.

———————————————————————-