தேனி கபடி வீரர் நெடுஞ்சாலை விபத்தில் மரணம்…

தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டி அருகே  தனியார் பேருந்து மோதி கபடி வீரர் சுத்தரமகாலிங்கம் என்பவர் மரணமடைந்தார். இவர்  இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .