Home செய்திகள் நெடுஞ்சாலை துறையினரால் தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு…

நெடுஞ்சாலை துறையினரால் தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு…

by mohan

மதுரை நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலையை நான்கு வழி பாதையாக விரிவுபடுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை என்றால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழகானந்தத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையை நான்கு வழியாக கட்டமைக்கும் பணியை கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியின் பொழுது மழைநீர் வடிகாலுக்கு உண்டான பணி சேர்த்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டு பைப்லைன் அமைக்கும் இதற்காக மூலக்கரை -பழங்காநத்தம் வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இரவு, பகலாக பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. ஆனால் இந்தப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் எந்த வித முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. இதன் பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதால் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட பள்ளங்களால் பழங்காநத்தம் பகுதியில் அதிக நேரம் போக்குவரத்து நெரிசல், பள்ளி கல்லூரி மாணவர்கள் குறித்த நேரத்தில் போக முடியாமல், தவிப்பு அடிக்கடி விபத்து, மற்றும் கனரக வாகனங்களால், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது இந்த நிலையில் நேற்று பசுமலை அருகே சாலையில் குடிநீர் இணைப்புக்காக சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டதில் அதன் வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி சாலையில் அபாயகரமாக தோண்டப்பட்டு இருக்கக்கூடிய பள்ளத்திற்கு எந்தவிதமான முன்னெச்சரிக்கை தடுப்புகளும், ஒளி எதிரொலிகிகளும் இல்லாத காரணத்தினால் சுமார் 20 அடி பள்ளத்தில் தான் ஓடி வந்த ஆட்டோ உடன் கவிழ்ந்து விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பள்ளத்தில் இருந்த ஆட்டோவை கிரேன் உதவியுடன் மேலே தூக்கினார். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் சவாரி ஏதும் இல்லை. இதனால் பெரிய அசம்பாவிதம் நடைபெறவில்லை.இருந்தபோதும் மேற்கண்ட சாலையில் பகல் மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி பேருந்துகள், பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், என நாள் முழுவதும் தொடர்ச்சியாக லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்தும் அஜாக்கிரதையாக பணியை மேற்கொண்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!