Home செய்திகள் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மருத்துவர்களுடன் இணைந்து செயல்படுங்கள் சுகாதார பணியாளர்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்..

கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மருத்துவர்களுடன் இணைந்து செயல்படுங்கள் சுகாதார பணியாளர்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்..

by Askar

கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மருத்துவர்களுடன் இணைந்து செயல்படுங்கள் சுகாதார பணியாளர்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், ஆதமங்கலம் புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவியாக அரிசி மளிகை பொருட்கள் மாஸ்க் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: உலகையே ஆட்டிப் படைத்து வரும் கண்ணுக்குத் தெரியாத ஒருவனா வைரஸ் தாக்கத்தினால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதால் அதிக இடங்களில் பரவாமல் உள்ளது .கலசபாக்கம் தொகுதியில் டெங்கு வந்த போது சிறப்பாக பணியாற்றியதால் யாருக்கும் பரவவில்லை. தற்போது மருத்துவ துறையில் உள்ள அனைவரும் இரவு பகல் பாராமல் பணி மேற்கொண்டு உள்ளதால் இதுவரை கலசப்பாக்கம் தொகுதி எந்த பகுதியிலும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே டாக்டர்கள் என்ன சொன்னாலும் அதனை மருத்துவ பணியாளர்கள் கேட்டு செயல்பட வேண்டும். இதுபோன்ற நேரங்களில் நீயா நானா என்று ஈகோ உங்களுக்குள் தோன்றக்கூடாது. உங்கள் முழு கவனமும் மக்களின் மீதே இருக்க வேண்டும் .இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கடலாடி மணிகண்ட பிரபு ,காரப்பட்டு சுபத்ரா உட்பட மருத்துவ பணியாளர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!