
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ‘மாற்றம் இந்தியா’ அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மனு நேற்று 03.03,17 சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வழிபாட்டு தளங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகாமையில் செயல்பட்டு வந்த 325 மதுக்கடைகள் மூடிப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் டாஸ்மாக் மதுபான நிறுவனம் பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர் நீதி மன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த பதில் மனுவில் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதில் வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகில் இருந்த 325 கடைகளும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.