கீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் குற்றாலம் ஐந்தருவி தோட்டத்து மாம்பழங்கள்

கீழக்கரையில் தற்போது தென்காசியை அடுத்த குற்றாலம் ஐந்தருவி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சுவை மிகுந்த மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நீண்ட நாள்களுக்கு பிறகு தற்போது மாம்பழ வரத்து தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பழங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ மாம்பழம் ரூ.100 க்கு விற்பனையாகிறது. முக்கனிகளில் முத்தான கனியான இந்த மாம்பழங்களை பார்க்கும் போதே, அதன் தித்திக்கும் சுவையை நினைத்து நாவில் நீர் சுரக்கிறது.

இதுகுறித்து குற்றாலம் ஐந்தருவி தோட்டங்களில் இருந்து கீழக்கரைக்கு மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் மசூது நம்மிடையே கூறும் போது “கீழக்கரை பகுதிக்கு கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு பழங்களை விறபனைக்கு கொண்டு வருகிறேன். கடந்த ஆண்டு கீழக்கரைக்கு இமாம் பசந்த், அல்போன்சா உள்ளிட்ட வகை மாம்பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்தேன். தற்போது ஒரு சில வகை மாம்பழங்கள் தான் அறுவடை ஆகி இருக்கிறது. இன்னும் மற்ற ரக பழங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.