மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்ற ரூபெல்லா தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஜமாஅத் பிரதிநிதிகளும் பங்கேற்ற தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நேற்று 02.03.17 மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சுகாதார துணை இயக்குனர் மீனாட்சி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடுவது குறித்த அடுத்த கட்ட நகர்வு பற்றி ஆலோசித்து முஸ்லீம் ஜமாத்தினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.